Latest Updates
-
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க..
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்
Andhra Style Vegetable Pulao Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் சுவையான ஒரு உணவை சமைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், கொஞ்சம் காய்கறியும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை செய்து பாருங்கள்.

இந்த ஆந்திரா வெஜ் புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான வெஜ் புலாவ் சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகள் காய்கறி சாப்பிடாதவர்கள் என்றால் இந்த ஸ்டைலில் செய்யும் போது அவர்கள் கூட காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வெஜ் புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் வெஜ் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பாஸ்மதி அரிசி
- ¼ கப் பச்சை பட்டாணி
- ½ கப் நறுக்கிய கேரட்
- ½ கப் நறுக்கிய பீன்ஸ்
- ½ கப் நறுக்கிய காலிஃபிளவர்
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 1 சிறிய தக்காளி, நறுக்கியது
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- 1 பிரிஞ்சி இலை
- 10 முந்திரிப் பருப்பு
- தேவையான அளவு உப்பு
மசாலா அரைக்க:
- அரை ஸ்பூன் கசகசா
- 1 ஸ்பூன் தனியா
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 இன்ச் பட்டை
- ½ அன்னாசிப்பூ
- 5 கிராம்பு
- 4 ஏலக்காய்
- 1 ஸ்பூன் மிளகு
- ஒரு சிறிய துண்டு ஜாதிக்காய்
- 2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
- 6 பல் பூண்டு
- 1 இன்ச் இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- ½ கப் புதினா இலைகள்
- ½ கப் கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி, 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- அனைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவி நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.
- கசகசா, தனியா, சீரகம், இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, ஏலக்காய், மிளகு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, தேங்காய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு மசாலா விழுதைத் தயார் செய்யவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடுபடுத்தவும்.
- ஒரு பிரிஞ்சி இலை மற்றும் சில முந்திரிப் பருப்புகளைச் சேர்த்து, முந்திரிப் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி போன்ற பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் தயாரித்து வைத்துள்ள பச்சை மசாலா விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கி மசாலா நன்கு வேகும் வரை, மிதமான தீயில் வதக்கவும்.
- மசாலா தயாரானதும், பட்டாணி, கேரட், பீன்ஸ் மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளைச் சேர்த்து, மசாலா அவற்றின் மீது நன்கு செட்டாகும்படி கிளறிவிடவும். காய்கறிகள் முக்கால் பதம் வேகும் வரை காத்திருக்கவும்.
- இறுதியாக, ஊறவைத்து நீரை வடித்த அரிசி, 2 கோப்பை தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அனைத்தையும் மெதுவாகக் கிளறிவிடவும். குக்கர் மூடியை மூடி, 2 விசில் வரும் வரை சமைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரின் அழுத்தம் தானாகவே குறையும் வரை அப்படியே விடவும்.
- விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு கரண்டியால் சாதம் உடையாத படி நன்கு கிளறி விடவும். அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் வெஜ் புலாவ் ரெடி!



Click it and Unblock the Notifications