Latest Updates
-
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி
சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பலரும் விரும்பி சாப்பிடுவது தக்காளி சட்னி. இந்த தக்காளி சட்னியை பலவாறு செய்யலாம். உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னியை சுவைக்க ஆசையா? அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி சரியான காம்பினேஷன். சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பலரும் விரும்பி சாப்பிடுவது தக்காளி சட்னி. இந்த தக்காளி சட்னியை பலவாறு செய்யலாம். உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னியை சுவைக்க ஆசையா? அப்படியானால் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி சட்னி அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* காஷ்மீரி மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 10-12
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தக்காளி - 1 கப் (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் காஷ்மீரி மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து தக்காளியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அதை இறக்கி புளியை சேர்த்து கிளறி, குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். இப்போது ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
