Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஆந்திரா தக்காளி பூண்டு தொக்கு ரெசிபி... இத செஞ்ச போதும்... ஒரு வாரத்துக்கு இட்லி, தோசைக்கு வேற சைடிஷே வேணாம்!
Andhra Style Thakkali Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் சைடிஷாக செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு செய்து சைடிஷாக வைத்து சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற எண்ணம் நம்மிடம் வந்து விட்டது.
உண்மையில் தொக்கு வகைகள் சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் ஆந்திரா ஸ்டைல் தக்காளி பூண்டு தொக்கு சப்பாத்திக்கு கூட அட்டகாசமாக இருக்கும். இந்த தொக்கை கொஞ்சம் அதிகமாக செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் தக்காளி பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா தக்காளி பூண்டு தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைக்க:
- பழுத்த தக்காளி பழுத்த - 6
- பூண்டு - 3 பல்
- மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயப்பொடி - ½ டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தொக்கு செய்ய:
- பூண்டு - கால் கப்
- தேவையான அளவு - உப்பு
செய்முறை:
- முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பூண்டு நிறம் மாறியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் விசில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும், விசில் அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கலக்கவும்.
- பின்னர் தொக்கு கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்.
- தொக்கு நன்கு கெட்டியானதும் வெந்தயப்பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.
- உங்களுக்கு வேண்டிய பதத்திற்கு தொக்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் ஆந்திர தக்காளி பூண்டு தொக்கு ரெடி. இதை காற்றுப்புகாத கொள்கலனில் வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
- இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications