Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையல் செய்ய தெரியுமா?
தக்காளி பப்பு அல்லது பருப்பு என வட மாநிலங்களில் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறப்பு தென்னிந்திய தால்.. ஆந்திர குஷான்களில் மிகவும் பிரபலமான இந்த உணவு. சைவ பிரியர்களுக்கான ஸ்பெஷல். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தினமும் உணவில் பருப்பு இருப்பதில்லை. ஆனால் அப்படி இருந்தால் அவர்களுக்கு அது பெரிய விருந்தாக இருக்கும்.. ஆம் இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....
தக்காளி பருப்பு மற்ற பருப்பு சமையல் குறிப்புகளுடன் தொடர்புடையது. ஆனால் தக்காளி பப்புவின் சுவை சற்று வித்தியாசமானது. இந்த தக்காளி பருப்பு செய்வது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம். பருப்பு செய்முறையை இரண்டு வழிகளில் தயாரிக்கலாம். அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு ஒரே நேரத்தில் சமைக்கவும். அல்லது பருப்பை மட்டும் இப்படி சமைத்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும்... மேலும் இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்புவை நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்..

தேவையானவை:
பருப்பு: 1 கப்
தக்காளி: 3
வெங்காயம்: 1 (பெரியது பொடியாக நறுக்க வேண்டும்)
பூண்டு பல்: 3-4
பச்சை மிளகாய்: 2
உப்பு: ருசிக்கேற்ப
மஞ்சள்: சிட்டிகை
மிளகாய் : 1 டீஸ்பூன்
புளி : சிறிய நெல்லிக்காய்
கடுகு : 1 டீஸ்பூன்
சீரகம் : 1 டீஸ்பூன்
பெருங்காயம் : சிட்டிகை அளவு
வெந்தயப் பொடி : சிட்டிகை அளவு
கறிவேப்பிலை : சிறிது
நெய் : 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் : 2
செய்முறை:
1. முதலில், தக்காளி பழத்தை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. பிறகு துவரம் பருப்பைக் கழுவி பிரஷர் குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகளைப் போட்டு சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கலக்கி விட வேண்டும்... தக்காளி துண்டுகள் மென்மையாகும் வரை நன்கு கலக்க வேண்டும்..
5. இப்போது குக்கரில் இருந்து ஆறிய பருப்பை எடுத்து நன்றாக மசித்து, அதை வேகவைத்த தக்காளியுடன் சேர்த்து கலக்கவும்.
6. பிறகு ஊறவைத்த புளியை எடுத்து அதனுடன் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும்.. பருப்பு கெட்டியான பிறகு, அதை எடுத்து தனியாக வைக்கவும்.
7. இப்போது மற்றொரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய்யை போட்டு வெந்ததும் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை வெந்தய போடி, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய் இரண்டு துண்டுகள், கறிவேப்பிலை போட்டு அது வெடித்ததும், தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான்... இப்போது சுவையான தக்காளி பப்பு தயார். இறுதியாக கொத்தமல்லி தழையால் அலங்கரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
8. இந்த ரசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.. அதிலும் இப்போது புரட்டாசி மாதம் ஆரபித்துள்ளது.. சைவம் மட்டுமே சாப்பிடும் இந்த நேரத்தில் இந்த பப்பு தக்காளியை செய்தால் போதும் வேறு ஏதும் தேவையில்லை.. அனைவரும்அமைதியாக சாப்பிட்டுவிடுவார்கள்.. அவ்வளவு ருசியாக இருக்கும்.. தேவைப்பட்டால் அதில் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்..



Click it and Unblock the Notifications












