Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இந்த வார இறுதியில் ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கி சமைக்க திட்டமிட்டுள்ளீர்களா? அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் இந்த வார இறுதியில் ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இதன் செய்முறை எளிது என்பதால் பேச்சுலர்களும் இதை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 350 கிராம்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* வெங்காயம் - 1
* தண்ணீர் - தேவையான அளவு
பிற பொருட்கள்...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த மட்டனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதே வேளையில் மிக்சர் ஜாரில், தேங்காய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து கிளறி, குறைந்தது 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் தேவையான அளவு நீரை ஊற்றி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து, அதில் கசூரி மெத்தி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications