Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க... கீரை பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க..
Andhra Style Keerai Thokku Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்து விட்டதா? ஏதாவது வித்தியாசமாக அதேசமயம் ஆரோக்கியமாகவும், எளிதாகவும் சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் கீரையைத்தான் சமைக்க வேண்டும். கீரையை எப்போதும் பொரியலாகவோ, கடைந்தோ சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் ருசியாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அதை வைத்து தொக்கு செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் கீரையை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கீரையை இந்த பக்குவத்தில் தொக்கு செய்து கொடுங்கள். இதன் சுவை வேற வெலலில் இருக்கும். அதுவும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, இதன் ருசி பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு கீரை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கட்டு கீரை
அரைக்க
- 2 பெரிய வெங்காயம்
- 10 பூண்டு பற்கள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- கால் ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- கீரையை நன்றாக மண் இல்லாமல் கழுவி தோராயமாக நறுக்கி வைக்கவும்.
- பின்னர் ஒரு மிக்சி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் மற்றும் வர மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போய் கலவை கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு கிளறவும்.
- பின்னர் நறுக்கிய கீரையைச் சேர்த்து, கீரை நன்றாக சுருங்கும் வரை வதக்கவும்.
- சிறிது தண்ணீர் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை மற்றும் கீரை நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
- இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- தொக்கு நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த தொக்கை சாதத்தில் ஊற்றி கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications