Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காரசாரமான... ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன்
Andhra Style Green Chilli Chicken: நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா?
அப்படியானால் சிக்கனைக் கொண்டு ஒரு ஆந்திரா ஸ்டைல் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். அது தான் ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன். இந்த சிக்கன் ரெசிபி ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

முக்கியமாக இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். எப்போதும் சிக்கன் 65 சாப்பிட்டு போரடித்தவர்கள், இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம். நிச்சயம் இது உங்களுக்கு பிடிக்கும். சரி, உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 250 கிராம்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீன் சில்லி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
க்ரீன் மசாலாவிற்கு...
* கொத்தமல்லி - 1/2 கப்
* கறிவேப்பிலை - சிறிது
தாளிப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கழுவிய சிக்கனுடன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், க்ரீன்
சில்லி பேஸ்ட், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
பிரட்டி, ஃப்ரிட்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் .
* அதே சமயம் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைப்
போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்
சேர்த்து சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், 2-3 டேபிள் ஸ்பூன் அரைத்த கொத்தமல்லி
மசாலாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, சிக்கனை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து, க்ரீன் மசாலாவில் உள்ள நீர் வற்றியதும்,
அடுப்பை அணைத்துவிட்டால், சுவையாக ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி
சிக்கன் தயார்.
Image Courtesy: kichencorner



Click it and Unblock the Notifications