Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 இன்ச் இஞ்சியும், 2 பெரிய வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா இஞ்சி சட்னியை அரைங்க..சுருக்குனு சூப்பரா இருக்கும்
Andhra Style Ginger Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் ஆரோக்கியமான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
வழக்கமான சட்னி போல அல்லாமல் இதில் இஞ்சி அதிகமாக சேர்த்து சட்னி அரைக்கப்படுவதால் இந்த சட்னி எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
- மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி - 2 இன்ச்
- பெரிய வெங்காயம் - 2
- வரமிளகாய் - 3
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- இஞ்சியை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், அதேபோல வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி விதைகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- பருப்புகள் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பருப்புகள் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து பருப்பை ஆற விடவும்.
- ஆறிய கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, புளி மற்றும் வெல்லத்தை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் இதை அப்படியே சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் ஆரோக்கியமான மற்றும் சுவையான இஞ்சி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications