Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க...செம சைடிஷா இருக்கும்...!
Andhra Style Chicken 65 Recipe in Tamil: சிக்கனை விரும்பும் அனைவருக்குமே சிக்கன் 65 பிடிக்கும். ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி இருக்கும் சுவை மாற்ற வேண்டும் என நினைப்போம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சமைப்போம், அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கு ஏற்றார் போல் உணவு பழக்கமும் சுவையும் மாறும். இங்கு எப்படி ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் 65 செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்:
சிக்கன் (எலும்பு இல்லாதது) - ½ கிலோ
தயிர் - ¼ கப்
கருவேப்பிலை - 2 கொத்து
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2
கான்ப்ளவர் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் - ½ டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ½ டீ ஸ்பூன்
சீரகத் தூள் - ¼ டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகுத் தூள் - ½ டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
எலுமிச்சை - ½ பழம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள்.
- அதனுடன் பாதியளவு காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- பின் கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- அடுத்து சிக்கன் துண்டுகளை நன்றாக அலசி கடைசியாக மஞ்சள் சேர்த்து அலசி கொள்ளவும்.
- அடித்து வைத்த முட்டை கலவையுடன் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
- வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தயிர், மீதம் இருக்கும் காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் மசாலாவில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை
சேர்த்து அதிகம் சிவக்க விடாமல் பொன்னிறமாக பொரித்து எடுத்து
கொள்ளவும்.
- நன்றாக எண்ணெய் வடித்து ஆறும் வரை வைத்திருக்கவும்.
- மீண்டும் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் கருவேப்பிலை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் நன்றாக கலந்து வைத்த தயிர் சேர்த்து கிளறி விடவும்.
- அதில் பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி நன்கு வேக விடவும்.
- சிக்கன் நன்றாக வெந்து மசாலா நன்கு சுருண்டு வரும் வேகவிடவும்.
- கடைசியாக கொத்தமல்லி, மற்றும் மிளகுத் தூள் தூவி அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான ஆந்திரா சிக்கன் 65 தயார்!



Click it and Unblock the Notifications