Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நாவூறும்.. காரசாரமான.. ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 - எப்படி செய்யணும் தெரியுமா?
Andhra Style Chicken 65 Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? அந்த சிக்கனை வாங்கினால் கட்டாயம் சிக்கன் 65 செய்து சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்யாமல், ஒருமுறை ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் 65 நாம் வழக்கமாக எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது போன்று இல்லாமல், சற்று வறுவல் போன்று இருக்கும்.
இந்த சிக்கன் 65 செய்தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். மழைக்காலத்தில் சிக்கனை நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் காரமாக இருப்பதால் சளி பிடித்திருந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணமும் கிடைக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* சோள மாவு -1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 100 கிராம்
* பச்சை மிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* ரெட் சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சிவப்பு ஃபுட் கலர் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த சிக்கனுடன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு,
மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், மிளகாய் தூள்,
மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 100 மிலி எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு, குறைவான தீயில் வைத்து,
15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் பச்சை மிளகாயை வெட்டாமல் அப்படியே
சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பச்சை மிளகாய் நன்கு வெந்ததும், அதில் சோயா சாஸ், க்ரீன் சில்லி
சாஸ், ரெட் சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1/2 டீஸ்பூன்
சிவப்பு ஃபுட் கலர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கலந்து, அதை
சிக்கனுடன் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால்,
சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 தயார்.



Click it and Unblock the Notifications