Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கத்திரிக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொடி கத்திரிக்காய் பொரியல் பண்ணுங்க... மட்டன் மாதிரி இருக்கும்...!
Andhra Style Brinjal Fry Recipe in Tamil: உங்கள் வீட்டில் கத்திரிக்காய் நிறைய உள்ளதா? எப்போதும் கத்திரிக்காயைக் கொண்டு சாம்பார் அல்லது பொரியல் தான் செய்வீர்களா? அதுவும் பொரியல் செய்தால், அதை ஒரே மாதிரி தான் எப்போதும் செய்வீர்களா? அப்படியே கத்திரிக்காயை சமைத்தாலும், நீங்கள் மட்டும் தான் சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் யாரும் சாப்பிடமாட்டார்களா?
அப்படியானால் அடுத்தமுறை கத்திரிக்காயைக் கொண்டு இந்த பக்குவத்தில் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பொரியல் செய்யுங்கள். இப்படி செய்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கத்திரிக்காய் பொரியலானது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல்கத்திரிக்காய் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ கத்திரிக்காய்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 3 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- தேவையான அளவு உப்பு
- 1½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- ½ டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் சீரகம்
- ½ டீஸ்பூன் மஞ்சள்
- ½ முதல் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் இட்லிப்பொடி
- 3 ஸ்பூன் வேர்க்கடலை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி ¼ டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலக்கவும். இதை தனியாக வைக்கவும்.
- கத்தரிக்காயைக் கழுவி சின்ன சின் துண்டுகளாக நறுக்கவும் இதை உப்பு நீரில் சேர்க்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- இதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய கத்திரிக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் இதை மூடி வைத்து, மிதமான தீயில் கத்திரிக்காய் வேகும் வரை இடையிடையே கிளறி சமைக்கவும்.
- வேர்க்கடலையை வாசனை வரும் வரை வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கத்திரிக்காய் முழுவதுமாக வெந்து மென்மையாக ஆனதும், கறிவேப்பிலை, வேர்க்கடலை பொடி மற்றும் இட்லி பொடி சேர்க்கவும்.
- மிதமான தீயில் 3 நிமிடங்கள் வாசனை வரும் வரை வதக்கவும். பின்ன மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வ்ளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் பொரியல் ரெடி. இதை சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications