Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும்
Andhra Peanut Onion Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வழக்கமாக செய்வது போன்று தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் சின்ன வெங்காயமும், வேர்க்கடலையும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்து அட்டகாசமான சுவையில் ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை வெங்காய சட்னி செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த சட்னியை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட எல்லோரும் 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். வழக்கமான சட்னி சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த சட்னி வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா வேர்க்கடலை வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 கப் பச்சைக் கடலை
- 5 வர மிளகாய்
- 2 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
- 2 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
- ¼ கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 2 ஸ்பூன் புளிக்கரைசல்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
- பின்னர் வேர்க்கடலையைச் சேர்த்து, லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் வறுத்த வேர்க்கடலையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- அதன்பின் அதே கடாயில் வர மிளகாய், துருவிய இஞ்சி, பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வறுக்கவும்.
- வதக்கிய பொருட்களை வேர்க்கடலை உள்ள கிண்ணத்திற்கு மாற்றவும்.
- வேர்க்கடலை மற்றும் பிற பொருட்கள் ஆறும் வரை காத்திருக்கவும். பின்னர் இந்த கலவையை மிக்சி ஜாரில் சேர்த்து அவற்றுடன் புளிக்கரைசல் மற்றும் தேவையான் அளவு உப்பை சேர்க்கவும்.
- அரை கப் நீரை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். இந்த சட்னி கொஞ்சம் தண்ணீராக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.
- அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய வாணலியில், மிதமான தீயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, கடுகை பொரிய விடவும்.
- பின்னர் உளுத்தம்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதை சட்னி மீது ஊற்றி நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா வேர்க்கடலை வெங்காய சட்னி ரெடி. இதை சூடான அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications