Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
இட்லி, தோசைக்கு ஒருமுறை கார சட்னியை இப்படி செஞ்சு பாருங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Andhra Kara Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று கார சட்னியை செய்யாமல், ஒருமுறை கார சட்னியை ஆந்திரா ஸ்டைலில் செய்து பாருங்கள். இந்த கார சட்னி நன்கு காரமாகவும், புளிப்பாகவும் இருப்பதால், 2 இட்லி அல்லது தோசையை சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் ஈஸி.
உங்களுக்கு ஆந்திரா கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5-6
* பெரிய வெங்காயம் - 2
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு (நீரில் 10 நிமிடம் ஊறு வைத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் புளியை சிறிது நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஒரு தட்டில்
வறுத்த பொருட்களை எடுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புக்களை மற்றும் வரமிளகாய்
சேர்த்து நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் ஊற வைத்துள்ள புளித் துண்டையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா கார சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications