Latest Updates
-
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும்
Andhra Gongura Puliyodharai Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஆந்திரா ஸ்டைலில் ஒருமுறை கோங்குரா புளியோதரையை முயற்சி செய்து பாருங்கள். வழக்கமாக புளியோதரை என்றால் அதை புளியை வைத்து ஒரே மாதிரிதான் செய்வோம். ஆனால் இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை முற்றிலும் வித்தியாமான சுவையில் இருக்கும்.

பொதுவாக ஆந்திரா ஸ்டைல் ரெசிபி என்றாலே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறுவார்கள். இந்த கோங்குரா புளியோதாரையும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அட்டகாசமான கோங்குரா புளியோதரை வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் புளியோதரை செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஆந்திரா கோங்குரா புளியோதரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் வேகவைத்த சாதம்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- சிறிதளவு கறிவேப்பிலை
அரைக்க தேவையானவை:
- 2 கப் கோங்குரா(புளிச்சக்கீரை)
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- 2 வர மிளகாய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- 2 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- 3 வர மிளகாய் (கிள்ளியது)
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- சமைத்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அது முழுமையாக ஆறிய பிறகு, அதில் மஞ்சள் தூள், எண்ணெய், உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, சாதம் குழைந்துவிடாதவாறு மென்மையாகக் கிளறவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு சேர்த்து, அது வெடிக்கத் தொடங்கியதும், வெந்தயத்தைச் சேர்த்து லேசான சிவப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- அதன் பின் வர மிளகாய் மற்றும் கோங்குராவைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும். கீரை மென்மையாவதற்கு கிட்டதட்ட 8 நிமிடங்கள் ஆகலாம்.
- வதக்கிய இலைகள் ஆறும் வரை காத்திருக்கவும். பிறகு, அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றவும். அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து, அவை பொரியும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் உடைத்த உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வறுத்த நிலக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- தயார் செய்து வைத்துள்ள சாதத்தில் இந்த தாளிப்பைச் சேர்க்கவும். அதனுடன் கோங்குரா விழுதையும் சேர்த்து, சாதம் குழைந்துவிடாதவாறு மென்மையாகக் கிளறி நன்கு கலந்துகொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புலாவ் ரெடி. இதை அப்பளம் மற்றும் உருளைக்கிழங்கு பொரியலுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
