Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி... இத ஒருதடவ செஞ்சா எல்லா வாரமும் இதைத்தான் செய்வீங்க...!
Andhra Chilly Chicken Recipe in Tamil: ஆந்திர உணவுகள் என்றாலே காரசாரமான உணவுகள்தான் என்பது பொதுவாக மக்களிடையே நிலவும் நம்பிக்கை. அது ஓரளவிற்கு உண்மையும் கூட, காரமான உணவை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால் காரமான உணவு சுவையாகவும் இருக்க வேண்டும், அதுதான் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் சில ஆந்திர உணவுகள் காரமாக இருப்பதுடன் தனித்துவமான சுவையுடனும் இருக்கும்.
அப்படி சுவையான மற்றும் காரமான ஒரு ஆந்திர உணவுதான் ஆந்திரா ஸ்பெஷல் சில்லி சிக்கன். பச்சை மிளகாயை பயன்படுத்தி செய்யப்படும் இந்த சிக்கன் காரமான மற்றும் சூப்பரான சைடிஷாக இருக்கும். முக்கியமாக சாம்பார் சாதம், பிரியாணி, இட்லி மற்றும் தோசைக்கு கூட சிறந்த சைடிஷாக இருக்கும். பெரும்பாலான மக்கள் ஹோட்டலுக்கு சென்றால் ஆர்டர் செய்யும் முதல் டிஷ்ஷாக இதுதான் இருக்கும். இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் சில்லி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சிக்கன் - அரை கிலோ
- பச்சை மிளகாய் - 20 (அரைத்தது)
- நெய் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - அரை கப்
- சோயா சாஸ் - அரை ஸ்பூன்
- வினிகர் - 1 ஸ்பூன்
- சோள மாவு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அடுப்பை குறைவான
தீயில் வைக்கவும்.
- கடாயில் பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் அல்லது
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- கடாயில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து
தோராயமாக 2-3 நிமிடங்கள் வறுக்கவும் மற்றும் அடிக்கடி கிளறி
விடவும்.
- மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு சிக்கனை
வதக்கவும்.
- கடாயில் தண்ணீர் சேர்த்து, சிக்கனை மூடி வைத்து 6-7 நிமிடங்கள் வேக
வைக்கவும்.
- கடாயில் சோயா சாஸ், வினிகர் மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர்
சிக்கனை நன்கு வேகவைக்கவும்.
- சோளமாவில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலவையாக்கி அதை
சிக்கனில் சேர்க்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கெட்டியாகும் வரை
வேகவைக்கவும்.
- அடுப்பை அணைத்து சிக்கனை இறக்கினால் சூடான சூப்பரான ஆந்திரா ஸ்டைல்
சில்லி சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications