Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... ஆந்திரா சிக்கன் ரோஸ்ட்
Andhra Chicken Roast: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் ரோஸ்ட் செய்யுங்கள்.
இந்த ஆந்திரா சிக்கன் ரோஸ்ட் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் ரோஸ்ட் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா சிக்கன் ரோஸ்ட் எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சில்லி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சில
நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில்
வைத்து 15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு,
15 நிமிடம் சிக்கனை வேக வைக்க, பின் சில்லி சாஸை சேர்த்து 2 நிமிடம்
கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஆந்திரா சிக்கன்
ரோஸ்ட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications