Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
காரசாரமான... ஆந்திரா சிக்கன் கிரேவி
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு சிக்கனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு சிக்கனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ஆந்திரா சிக்கன் கிரேவியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஆந்திரா சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
ஊற வைப்பதற்கு...
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மசாலா பொடிக்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
பிற பொருட்கள்...
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (நறுக்கியது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 6-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த பொடியை சேர்த்து கிளறி சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைத்து இறக்கினால், ஆந்திரா சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: spiceeats



Click it and Unblock the Notifications