Latest Updates
-
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
ஆந்திரா ஸ்பெஷல் குட்டி வங்காய குரா ரெசிபி...இந்த மாதிரி செய்யுங்க..சாதத்தோட பிசைந்து சாப்பிட செமையா இருக்கும்!
Andhra Brinjal Curry Recipe in Tamil: மதியம் என்ன சமைப்பது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயை வைத்து சூப்பரான ஆந்திரா ஸ்பெஷல் குட்டி வங்காய குரா குழம்பை செய்யுங்கள். நம்ம ஊர் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மாதிரியே இருக்கும் இந்த குழம்பு வேற லெவல் சுவையில் இருக்கும். இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, பிரமாதமாக இருக்கும்.
இந்த குழம்பின் ஸ்பெஷலே ஒரு பொடியைத் தயாரித்து, அதை கத்திரிக்காயினுள் வைத்து, எண்ணெயில் நன்கு வேக வைத்து செய்வது தான். இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். புதிதாக சமையல் செய்ய விரும்புபவர்கள் கூட இந்த குழம்பை தாராளமாக செய்யலாம்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் குட்டி வங்காய குராவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் குட்டி வங்காய குராவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 6 கத்திரிக்காய்
- ½ டேபிள் ஸ்பூன் புளி
- 1 ஸ்பூன் வெல்லம்
- ¼ ஸ்பூன்மஞ்சள் தூள்
- உப்பு
வறுத்து அரைப்பதற்கு:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 6 வர மிளகாய்
- ¼ கப் வேர்க்கடலை
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
- ¼ தேக்கரண்டி வெந்தயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- புளியை சூடான நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். சாறு பிழிந்து, மொத்தமாக 1 கப் வரும்படி தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் கத்திரிக்காயின் அடிப்பகுதியில், முழுவதுமாக வெட்டாமல், முக்கால் பாகம் வரை நான்கு துண்டுகளாக வெட்டவும். காம்பை அப்படியே வைத்திருக்கவும்.
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் வேர்க்கடலை, வர மிளகாய், கொத்தமல்லி விதைகள் மற்றும் வெந்தய விதைகளைச் சேர்த்து வறுக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை சேர்த்து, அனைத்துப் பொருட்களும் வாசனை வரும் வரை வறுக்கவும். சீரான முறையில் வறுக்க, அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும்.
- கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து, பொன்னிறமாகி வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் ஆறவைத்து, உப்பு, வெல்லம் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துப் பொடியாக அரைக்கவும்.
- இந்த மசாலாவை கீறிய கத்திரிக்காய்க்குள் அடைக்கவும். மீதமுள்ள மசாலா பொருட்களை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் ரெடி பண்ணி வைத்த கத்திரிக்காயை அதில் சேர்க்கவும். எல்லா இடங்களிலும் எண்ணெய் படும்படி மெதுவாகக் கிளறவும்.
- மூடி வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வேக வைக்கவும். சீராக வேகவைப்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு நிமிடத்திற்கும் இடையில் கிளறி விடவும்.
- 1 கப் தண்ணீர் மற்றும் புளிக்கரைசலைச் சேர்க்கவும். மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- மீதமுள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரை சமைக்கவும். எண்ணெய் பிரிந்து தனியாக வரும்போது அடுப்பை அணைத்தால் சுவையான ஆந்திரா குட்டி வங்காயா குரா ரெடி!



Click it and Unblock the Notifications
