6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Nellikai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் அவர்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சமைத்து கொடுங்கள். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

Amla Chutney How To Make Nellikai Chutney Recipe

ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் நெல்லிக்காயை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை நெல்லிக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் நெல்லிக்காய் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த நெல்லிக்காய் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த நெல்லிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* இஞ்சி - சிறிது
* நெல்லிக்காய் - 6 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன தக்காளி - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளி மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, துருவிய தேங்காயையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 17, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion