Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
மணமணக்கும்.. ஆம்பூர் ஸ்டைல் வெஜிடேபிள் பிரியாணியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Ambur Style Vegetable Biryani Recipe In Tamil: விடுமுறை நாட்களில் அமாவாசை வந்தாலே கஷ்டம் தான். ஏனெனில் இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட முடியாது. இருப்பினும், விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க வெஜிடேபிள் பிரியாணியை சமைத்து சாப்பிடலாம்.
அதுவும் ஆம்பூர் ஸ்டைலில் வெஜிடேபிள் பிரியாணியை செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்தால், நிச்சயம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். முக்கியமாக இந்த ஸ்டைல் பிரியாணி வீடே மணக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கும். சொல்லப்போனால் அசைவ பிரியாணிக்கு இணையான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு ஆம்பூர் ஸ்டைல் வெஜிடேபிள் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்பூர் ஸ்டைல் வெஜிடேபிள் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 8
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 50 மிலி
* பட்டை - 2
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 1 துண்டு
* சோம்பு - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் -2
* பெரிய வெங்காயம் - 2
* புதினா இலைகள் - சிறிது
* தக்காளி - 2
* இஞ்சி - 5 துண்டு
* பூண்டு - 7 பல்
* கொத்தமல்லி - சிறிது
* தயிர் - 50 மிலி
* உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 2
* உருளைக்கிழங்கு - 2
* காலிஃப்ளவர் - 100 கிராம்
* பாசுமதி அரிசி - 2 கப்
* தண்ணீர் - 4 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும். பின் வரமிளகாயை சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்
ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை, சோம்பு
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் புதினாவை சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள வரமிளகாய், இஞ்சி, பூண்டு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, அதையும் குக்கரில் சேர்த்து பச்சை
வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும்.
* பின் உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கிளறி,
சுவைக்கேற்ப உப்பு, தயிர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து 2 கப் பாசுமதி அரிசிக்கு 4 கப் நீரை ஊற்றி கிளறி ஒரு கொதி
விட வேண்டும்.
* கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி, ஊற வைத்துள்ள பாசுமதி
அரிசியையும் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான
தீயில் வைத்து, குக்கரை இறக்கிவிட்டு, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து,
கல் சூடானதும், அதன் மேல் குக்கரை வைத்து, ஒரு தட்டு கொண்டு மூடி
வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் ஒரு பாத்திரம் சுடுநீரை வைத்து, 10 நிமிடம் தம்
போட்டு இறக்கினால், சுவையான ஆம்பூர் ஸ்டைல் வெஜிடேபிள் பிரியாணி
தயார்.
Image Courtesy: AMINA CREATIONS



Click it and Unblock the Notifications










