Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
potato pakora recipe : ஆலு பக்கோடா
இதுவரை நீங்கள் வெங்காய பக்கோடா செய்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆலு பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது சூடாகவும், காரமாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையாக உள்ளதா? எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அதைக் கொண்டு அட்டகாசமான ருசியைக் கொண்ட ஆலு பக்கோடா செய்யுங்கள். இதுவரை நீங்கள் வெங்காய பக்கோடா செய்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆலு பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஆலு பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆலு பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (மெல்லிசாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப் முதல் 1/2 கப் வரை
செய்முறை:
* ஒரு பௌலில் எண்ணெயைத் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஆலு பக்கோடா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
