Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மொறுமொறுப்பான... ஆலு 65
உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆலு 65 அல்லது உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆலு 65 ரெசிபிக்கு பேபி உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

கீழே ஆலு 65 எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பேபி உருளைக்கிழங்கு - 20
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீர் ஊற்றி உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கு ஓரளவு வெந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உருளைக்கிழங்கு வேகாமல் இருக்க வேண்டும்.
* பின் அதன் தோலை நீக்கிவிட்டு, இரு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய பௌலில் உருளைக்கிழங்கைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்போது சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஆலு 65 ரெடி...
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications