ருசியான... ஆட்டு தலைக்கறி தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Aatu Thalakari Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டு தலைக்கறி என்றால் பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு அவ்வளவு ருசியாக செய்ய தெரியாதா? இதனாலேயே வீட்டில் ஆட்டு தலைக்கறியை வாங்கமாட்டீர்களா? அப்படியானால் ஆட்டு தலைக்கறி தொக்கை ஒருமுறை செய்தால் போதும், பின் அடிக்கடி செய்வீர்கள்.

ஏனெனில் இந்த தொக்கு செய்வதற்கு மசாலா அதிகம் தேவையில்லை. ஒரே ஒரு மசாலாவை மட்டும் வறுத்து பொடித்து செய்து கொண்டால் போதும், இந்த தொக்கு வேற லெவல் ருசியில் இருக்கும். இந்த தொக்கு ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். சமையலறையில் நீண்ட நேரம் இருக்க பிடிக்காவிட்டால், இந்த ஒரு தொக்கு செய்து, ரசம் வைத்தால் போதும் தேவாமிர்தம் போன்று அவ்வளவு அருமையாக இருக்கும்.

Aatu Thalakari Thokku How To Make a Aatu Thalakari Thokku Recipe

உங்களுக்கு ஆட்டு தலைக்கறி தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு தலைக்கறி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஆட்டு தலைக்கறி - 350 கிராம்

வறுத்து அரைப்பதற்கு...

* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 2 பூ
* ஜாதிபத்திரி - 1 இதழ்
* சோம்பு - 2 சிட்டிகை
* சீரகம் - 2 சிட்டிகை
* மல்லி - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் தலைக்கறியை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, ஜாதிபத்திரி, சோம்பு, சீரகம், மல்லி போன்றவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு கழுவி வைத்துள்ள ஆட்டு தலைக்கறியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தலைக்கறி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி உயர் தீயில் வைத்து ஒரு கொதி வந்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 20-25 நிமிடம் நன்கு தலைக்கறியை வேக வைக்க வேண்டும்.
* 25 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், நீர் வற்றி தலைக்கறி நன்கு வெந்திருப்பதைக் காணலாம்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, ஒருவேளை காரம் போதவில்லை என்றால், சிறிது மிளகுத் தூள் சேர்த்து கிளறினால், சுவையான ஆட்டு தலைக்கறி தொக்கு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 7, 2025, 14:31 [IST]
Desktop Bottom Promotion