Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆப்பிள் பாயாசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Aadi Velli Special Apple Payasam Recipe In Tamil: ஆடி மாதம் தொடங்கிவிட்டது. அதே சமயம் இன்று ஆடி முதல் வெள்ளி. ஆடி மாதங்களில் வெள்ளி, செவ்வாய் கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்நாளில் அம்மனின் அருளைப் பெற அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, பலவிதமான இனிப்புகளை செய்து படைத்து வழிபடுவார்கள். அதில் பெரும்பாலானோர் படையலாக செய்வது பாயாசமாகவே இருக்கும்.
ஆடி வெள்ளி அன்று வழக்கமாக செய்யும் பாயாசத்தை செய்யாமல், ஒரு வித்தியாசமான பாயாசத்தை செய்து அம்மனுக்கு படைத்து, உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கொடுங்கள். இதனால் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். அது தான் ஆப்பிள் பாயாசம்.

இதுவரை ஆப்பிளை வெறுமனே அல்லது மில்க் ஷேக் என்று தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஆப்பிள் பாயாசத்தை ஒருமுறை செய்தால், பின் எந்த ஒரு விஷேசம் வந்தாலும் இந்த பாயாசத்தை தான் முதலில் செய்வீர்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.
உங்களுக்கு ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆப்பிள் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆப்பிள் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆப்பிள் - 2
* நெய் - 2 ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
* ஃபுல் க்ரீம் பால் - 1 லிட்டர்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* சர்க்கரை - 50 கிராம்
* கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஆப்பிளின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் அதை துருவிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், பாயாசத்திற்கு தேவையான அளவு முந்திரி மற்றும் உலர்
திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவி
வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து, 5 நிமிடம் நன்கு சுருள வதக்கி, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 லிட்டர் பாலை ஊற்றி, 3/4 லிட்டர் வரும்
அளவில் நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து,
சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒருவேளை
கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால், சர்க்கரையின் அளவை அதிகரித்துக்
கொள்ளுங்கள்.
* பிறகு அதில் வதக்கி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து கிளறி, 5 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் ஏலக்காய் தூள் மற்றும் ப்ரை செய்து வைத்துள்ள
முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
ஆப்பிள் பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications