Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க குழந்தைகளின் லன்ச் பாக்ஸில் இந்த உணவுகளை தெரியாமகூட பேக் பண்ணிராதீங்க... இல்லனா அவ்வளவுதான்...!
பெரும்பாலான குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை, அதனால்தான், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் சத்தான லன்ச் பாக்ஸை பேக் செய்யும் போது, நாம் தேர்ந்தெடுக்கும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது என்றாலும், அவர்களுக்கு கொடுக்கக்கூடாத சில உணவுகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம் மற்றும் நாள் முழுவதும் அவர்களின் ஆற்றல் அளவை உறுதிப்படுத்தலாம். இந்த பதிவில் குழந்தைகளுக்கு தெரியாமல் கூட கொடுத்துவிடக்கூடாத மதிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நூடுல்ஸ்
நீங்கள் உங்கள் குழந்தைக்கு டிபன் பேக் செய்யும் போது, அவர்களின் லஞ்ச பாக்ஸில் உடனடியாக சமைக்கக்கூடிய உணவுகள் இருப்பதைத் தவிர்க்கவும். உடனடியாக சமைப்பது என்று வரும் போது அதில் முதல் இடத்தில் இருப்பது நூடுல்ஸ்தான். நூடுல்ஸ் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட்டவை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் நிறைந்தவை, அவற்றில் எந்த ஊட்டச்சத்தும் இல்லை. இந்த நூடுல்ஸில் வெறும் வெற்று கலோரிகளே உள்ளன மற்றும் அவை குடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மீதமான உணவுகள்
பெரும்பாலும், பெற்றோர்கள் எஞ்சியிருக்கும் கறிகள்/காய்கறிகளை குழந்தைகளின் லஞ்ச பாக்ஸில் அடைப்பார்கள். ஆனால், கோடை காலத்தில், மதிய உணவு நேரத்தில், உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், உணவு கெட்டுப்போகவும், குழந்தைகள் அதை உணராமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் புட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது.
வறுத்த உணவுகள்
வறுத்த உணவை அதிகம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. பிரஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வறுத்த சிக்கன் போன்ற ஆழமான வறுத்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளில் அதிகமாக உள்ளன மற்றும் இவை எடை அதிகரிப்பு மற்றும் குடல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். சிக்கன் அல்லது பனீர் போன்ற உணவுகளைத் தயாரிக்க பேக்கிங், கிரில்லிங் அல்லது ஸ்டீமிங் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் சோடியம் மற்றும் செயற்கை சேர்க்கைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த இறைச்சிகள் நீண்ட காலத்திற்கு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட இறைச்சிகள் போன்ற மெலிந்த, பதப்படுத்தப்படாத புரத மூலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பேக்கில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள்
சிப்ஸ், குக்கீகள் மற்றும் பேக்கில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் எளிதில் கிடைக்கலாம, ஆனால் அவை பெரும்பாலும் ஆரோக்கியமற்ற சேர்க்கைகள், பாதுகாப்பு பொருட்கள் மற்றும் அதிக அளவு உப்பு, சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் நிரப்பப்பட்டவையாக இருக்கின்றன. இந்த தின்பண்டங்கள்மோசமான உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கும்.
எனர்ஜி பானங்கள்
எனர்ஜி பானங்கள் உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக்குப் பிறகு ஆற்றலைப் பெற உதவும் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அவர்கள் நீண்ட காலமாக, அவர்களுக்கு நன்மை செய்வதை விட அதிக தீங்கு விளைவிக்கும். அவற்றில் சர்க்கரை மற்றும் காஃபின் அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications
