Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
உங்கள் குழந்தைகளை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள இந்த விஷயங்களை அவசியம் செய்யுங்க...!
ஒரு பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் குழந்தைகள் வருத்தமாக இருக்கும் போதோ அல்லது தோல்வி அடையும் போதோ நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தைகள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்த்து வளர்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சிறந்த ரோலர் மாடலாக இருக்க வேண்டும். அவர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து நீங்கள் செயல்பட வேண்டும்.

அவர்களுக்கு சில விஷயங்களை நீங்கள் மென்மையாக செய்ய வேண்டும். உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு உந்து சக்தியாக செயல்படும். சரி வாங்க உங்கள் குழந்தைகளை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
உங்கள் குழந்தைகளை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம்
நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுங்கள்
உங்கள் குழந்தைக்கு நேர்மறை எண்ணங்களை சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்கு நேர்மறை பாதையில் வழிகாட்டுங்கள். உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, படிப்பது அல்லது அரட்டை அடிப்பது போன்ற விஷயங்களை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுடன் நெருங்கிய ஒரு அன்பான பிணைப்பை நீங்கள் ஏற்படுத்த முடியும். அரவணைப்பு, புன்னகை மற்றும் ஊக்கம் போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவது மிகவும் அவசியம்.
முன் மாதிரியாக இருங்கள்
குழந்தைகள் உலகம் உங்களைச் சுற்றி தான் அமைகிறது. உங்களைப் பார்த்து தான் நிறைய விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு சிறந்த ரோலர் மாடலாக இருங்கள். குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய நினைத்தால் முதலில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கடைபிடியுங்கள். குழந்தைகள் புத்தகம் படிக்க நீங்கள் விரும்பினால் அதை நீங்கள் முதலில் செயல்படுத்துங்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் முன் மாதிரியாக செயல்படுவது மிகவும் அவசியம்.
குழந்தையின் நடத்தையை எடுத்துக் கூறுங்கள்
குழந்தைகள் கோபமாக நடந்து கொள்ளும் போது அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை எடுத்துக் கூறுங்கள். உங்கள் சொந்த உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கூறும் போது ஒருவரை எந்தளவு நாம் பாதிக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். எனவே உங்கள் உணர்வுகள் பற்றியும், குழந்தையின் உணர்வுகள் பற்றியும் பேசுவது நல்லது.
குழந்தைகள் நல்ல செயல்களை செய்யும் போது பாராட்டுங்கள்
உங்கள் குழந்தை நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும் போது பாராட்டுவது மிகவும் அவசியம். உங்கள் பாராட்டுகள் அவர்களை உற்சாகப்படுத்தும். பாராட்டுகள் நேர்மறை நடத்தையை அதிகரிக்கிறது. சவாலான நடத்தையை குறைக்கிறது. எனவே முடிந்த வரை உங்கள் குழந்தைகளை அவ்வப்போது பாராட்டுங்கள்.
உங்கள் குழந்தையின் நிலைக்கு இறங்குங்கள்
குழந்தையுடன் பேசும் போது அவர்களின் நிலைக்கு இறங்கி பேசுவது மிகவும் அவசியம். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே பரஸ்பர புரிதல் இருந்தால் போதும் நெருக்கம் அதிகமாகும். எனவே அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். இதன் மூலம் அவர்கள் உங்கள் வழிமுறைகளை எளிதாக பின்பற்றுவார்கள்.
சுறுசுறுப்பாக அவர்கள் பேசுவதை கேளுங்கள்
உங்கள் குழந்தை பேசும் போது நீங்கள் தலையசைத்து கேட்பதை பார்க்கும் போது அவர்கள் உற்சாகம் ஆகிவிடுவார்கள். அவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களை உங்களிடம் கூற ஆசைப்படுவார்கள். எனவே குழந்தையுடன் பேசும் போது அவர்கள் கூறும் விஷயங்களை காது கொடுத்து கேளுங்கள். சுறுசுறுப்பாக கேளுங்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றும் போது உங்கள் குழந்தை உங்களை மதிக்கவும், நம்பவும் கற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் நீங்கள் வாக்குறுதிகளை அளித்தால் அதை காப்பாற்றுவீர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள். எனவே வாக்குறுதிகளை அளித்தால் அதை எப்பொழுதும் நிறைவேற்ற கற்றுக் கொள்ளுங்கள்.
எது முக்கியம் என்பதை முடிவு செய்யுங்கள்
உங்கள் குழந்தைக்கு எது முக்கியம் என்பதை சொல்லிக் கொடுங்கள். முக்கியமில்லாத காரியங்களை புறக்கணிக்க கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். உங்கள் குழந்தைகள் சரியான இலக்குகளை நோக்கி நகருவார்கள்.
சவாலான சூழ்நிலைக்கு தயாராக சொல்லிக் கொடுங்கள்
உங்கள் குழந்தைகள் எதாவது கஷ்டம் என வந்தால் அதை சமாளிக்க கற்றுக் கொடுங்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது இருக்கும் அதை எப்படி எடுக்க வேண்டும், அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுங்கள். அதே நேரத்தில் பிரச்சினை வரும் போது துவண்டு விடாமல் அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க கற்றுக் கொடுங்கள்.
நகைச்சுவை உணர்வு வேண்டும்
மகிழ்ச்சியாக இருக்கும் போது எப்பொழுதுமே நாம் உற்சாகம் அடைகிறோம். எனவே உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பாட்டு பாடுவது, ஆட்டம் ஆடுவது மற்றும் வேடிக்கை விளையாட்டுகளில் விளையாடுங்கள். உங்கள் குழந்தையின் நகைச்சுவை உணர்வை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைகிறார்கள்.



Click it and Unblock the Notifications
