Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்கும் போது கட்டாயம் கவனிக்க வேண்டியவைகள்!
Milk Powder For Baby In Tamil: வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. எனவே உங்கள் வீட்டில் கைக் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக கைக் குழந்தைகளின் பிரதான உணவாக பால் உள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதம் காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்தப்படுகிறது.
இருப்பினும் சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் சமயங்களில் பால் பவுடர்களை தாய்மார்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பால் பவுடர் உண்மையில் தரமானதா? ஆரோக்கியமான ஒன்றா? என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள். எனவே தான் இனி நீங்கள் பால் பவுடரை வாங்கும் போது இந்த 5 விஷயங்களை கவனத்தில் வைத்து வாங்குவது நல்லது.

பால் பவுடரை சரியான முறையில் தேர்ந்தெடுக்க டிப்ஸ்கள்:
ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்ட பால் கலவைகள்
நீங்கள் ஒரு பால் கலவையை தேர்ந்தெடுக்கும் போது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியம். கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சீரான கலவையை தேர்ந்தெடுப்பது அவசியம்.
ஏனெனில் புரதச்சத்து குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் குழந்தையின் பற்களுக்கு உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பால் கலவையை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
ஆர்கானிக் பொருட்கள் அடங்கிய பால் கலவை
இயற்கை பொருட்கள் அடங்கிய பால் பொருட்கள் என்றைக்குமே குழந்தைக்கு தீங்கு விளைவிக்காது. எனவே ஆர்கானிக் பொருட்கள் அடங்கிய பால் பொருட்களை பயன்படுத்துங்கள்.
செயற்கை இராசயனங்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் அடங்கிய பால் கலவைகள் வேண்டாம். அவை உங்கள் குழந்தைக்கு பக்க விளைவுகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. எனவே அதிகப்படியான செயற்கை இனிப்புகள், இராசயனங்கள் கொண்ட பால் கலவையை தவிருங்கள்.
உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பால் கலவை
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பால் கலவை குழந்தையின் பசியை தீர்க்க கூடியதாக இருக்க வேண்டும். குழந்தையின் உணவுத் தேவைக்கு ஏற்ற ஒன்றாக இருக்கா என்பதை லேபிளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு லாக்டோஸ், சோயா மற்றும் பசையம் போன்ற உணவுப் பொருட்களால் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதையும் லேபிளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படி உங்கள் குழந்தைக்கு ஏற்ற பால் பவுடரை தேர்ந்தெடுப்பது அவசியம்.
சுவை மற்றும் அமைப்பு மிகவும் முக்கியம்
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பால் பவுடரின் வாசனை மற்றும் சுவை அதன் தன்மை போன்ற விஷயங்கள் குழந்தைக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு பிடித்த சாக்லேட் அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சில குழந்தைகளுக்கு மென்மையான கலவைகள் என்றால் பிடிக்கும். எனவே அந்த மாதிரி உங்கள் குழந்தையின் விருப்பத்திற்கு ஒத்துப் போகிற பால் பவுடரை தேர்ந்தெடுங்கள்.
நல்ல பிராண்ட் பெயர் கொண்ட பால் கலவை
எந்தவொரு பால் பவுடரை வாங்குவதற்கு முன்பு அதன் பிராண்ட் பெயரை பார்ப்பது நல்லது. நல்ல பெயர் கொண்ட பிராண்ட்டை வாங்குங்கள். ஒரு பிராண்ட் கடுமையான தரக் கட்டுப்பாடு தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தி வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்தி அதன் படி வாங்குங்கள்.
பிராண்டின் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரங்கள் அவசியம். வாடிக்கையாளர்களின் கருத்துக்கள், பிற பெற்றோர்களின் கருத்துக்கள் மற்றும் பாதுகாப்பு இவற்றை யெல்லாம் கேட்டு அறிந்து கொண்டு உங்கள் குழந்தைக்கு ஏற்ற பால் பவுடரை தேர்ந்தெடுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. எனவே உங்கள் குழந்தையின் சுவைக்கு ஏற்ற பால் பவுடரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதே நேரத்தில் உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளையும் அது பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைத்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி மேம்படும். மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொண்டு உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications