பெற்றோர்களே!இந்த விஷயங்களை உங்க குழந்தை முன்னாடி தெரியாம கூட பண்ணிராதீங்க...அதான் அவங்களுக்கு நல்லது!

பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு எது நல்லது என்று சிந்தித்து அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய விரும்புகிறார்கள். இந்த செயல்பாட்டில், சில பெற்றோர்கள் தவறான முடியுவுகளை எடுத்து, தங்கள் சொந்த குழந்தைக்கு உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் அவர்களுக்கேத் தெரியாமல் தீங்கு செய்யலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் பல விஷயங்களை தங்கள் பெற்றோரிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள். இந்த சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

Things Parents Should Never Do in Front of Kids in Tamil

தங்கள் குழந்தைகளை ஒழுக்கமாகவும், சுயமரியாதை நிறைந்தவர்களாகவும் வளர்க்க பெற்றோர் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு சில விஷயங்களை தங்கள் குழந்தைகள் முன் எப்போதும் செய்யக்கூடாது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சண்டை போட்டுக்கொள்வது

தம்பதிகள் ஒன்றாக வாழும் போது தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான். உங்கள் குழந்தைகளின் முன் வாதிடுவது நிச்சயமாக நேர்மறையான பெற்றோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்காது.

கருத்து வேறுபாடுகளின் போது உங்கள் கொந்தளிக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகள் முன் சண்டையிடக்கூடாது. உங்கள் துணையை அடிப்பது அல்லது அவர்களை நோக்கி கை ஓங்குவது என்பது எந்த சூழ்நிலையிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

கேஜெட்களில் அதிக நேரம் செலவிடுதல்

உங்கள் குழந்தை கேஜெட்களுடன் (டேப்லெட்கள்/ஸ்மார்ட்ஃபோன்கள்/லேப்டாப்) அதிக நேரம் செலவிடுவதாக நீங்கள் உணர்ந்தால், அதற்குக் காரணம் நீங்கள் கேஜெட்களுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுவதை அவர்கள் பார்ப்பதால்தான்.

குழந்தை உளவியலாளர்கள் உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, புத்தகங்களைப் படிப்பதிலும், வெளிப்புறங்களில் விளையாடுவதிலும், அவர்களுடன் ஜாலியாக விளையாடவும் நேரத்தை செலவிடுமாறு கடுமையாக பரிந்துரைக்கின்றனர்.

பிறர் முன்னிலையில் கிண்டல் செய்வது

உங்கள் குழந்தையை மற்றவர்கள் முன் கிண்டல் செய்வது உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம் ஆனால் அது அவர்களை உள்ளிருந்து காயப்படுத்தலாம். இதனால் உங்கள் குழந்தை எதிர்மறை எண்ணங்களுடனும், வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு பயத்துடனும் அல்லது நம்பிக்கையின்மையுடனும் வளருவார்கள்.

உங்கள் குழந்தைகளை பகிரங்கமாக கேலி செய்யாதீர்கள் அல்லது உங்கள் குழந்தைகளை அவமானப்படுத்தாதீர்கள், அது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தவறான வார்த்தைகளை உபயோகிப்பது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும். அவர்கள் முன் மற்றவர்களைப் பற்றி தவறாக பேசுவது உங்கள் குழந்தைக்கு உங்கள் மீது மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறீர்களோ அதே மாதிரி அவர்கள் நடந்துகொள்ளத் தொடங்குவார்கள்.

மேலும் உங்கள் குழந்தை மற்றவர்களை திட்டுவதற்கு ஒருபோதும் தவறான அல்லது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. இது அவர்கள் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொய் சத்தியம் செய்வது

குழந்தைகள் முன் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொள்ளும் தம்பதிகள், தங்கள் குழந்தைகளிடம் மோசமான நடத்தைக்கு வழிவகுக்கிறார்கள், மேலும் இது குழந்தைகளிடம் மனச்சோர்வு மற்றும் தற்கொலை போக்குகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் திட்டுவது, பெற்றோரிடம் பொய் சொல்லவும், திருடுதல், சண்டையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

ஒப்பிட்டு பேசுவது

குழந்தைகள் அதன் கல்வி, விளையாட்டு அல்லது பிற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் போது அனைத்து பெற்றோர்களும் அதனை விரும்புகிறார்கள். இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் அதிக எதிர்பார்ப்புகள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது மற்றும் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளது. அவர்களின் சிறிய சாதனைகளுக்குக் கூட அவர்களைப் பாராட்ட முயற்சிக்கவும். ஒருபோதும் அவர்கள் முன்னிலையில் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்

பெற்றோர்கள் குழந்தைகள் முன் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை எந்த சூழ்நிலையிலும் தவிர்க்க வேண்டும். நீங்கள் புகைபிடிக்கும் போது, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளும் அதனை பின்பற்ற வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அருகில் புகைபிடிப்பது அவர்களுக்கு சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா, காது தொற்று போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

லஞ்சம் கொடுத்தல்

உங்கள் குழந்தையின் முன் லஞ்சம் கொடுப்பது உங்கள் குழந்தையின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கலாம். இதனால் அவர்களுக்கு உங்கள் மீதும் சமூகத்தின் மீதும் தவறான எண்ணம் தோன்றலாம். ஒரு குழந்தைக்கு அல்லது ஒரு குழந்தையின் முன்னால் லஞ்சம் கொடுப்பது அவர்களின் ஒட்டுமொத்த மன வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் நியாயமற்ற வழிகள் மூலம் எளிதில் தாங்கள் நினைத்ததை அடையலாம் என்ற தவறான நம்பிக்கைக்கும் வழிவகுக்கும்.

Story first published: Thursday, July 13, 2023, 18:15 [IST]
Desktop Bottom Promotion