Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
வயிற்றில் வளரும் குழந்தையின் ஒவ்வொரு உதைக்கும் உள்ள அர்த்தம் என்னன்னு தெரியுமா?
Pregnancy Tips In Tamil: கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியான கால கட்டமாகும். இந்த கால கட்டத்தில் எல்லா தாய்மார்களும் பிறக்கின்ற குழந்தை குறித்து ஏகப்பட்ட கனவுகளை சுமப்பது உண்டு. குழந்தை ஒவ்வொரு முறை உதைக்கும் போதும் அதை நினைத்து மகிழ்ச்சி அடைவது உண்டு.
ஆனால் இந்த உதைகள் எல்லாம் உங்கள் கர்ப்பகால மைல்கற்களை எவ்வளவு தூரம் அடைந்துவிட்டீர்கள் என்பதைச் சொல்லும் ரகசிய மொழி என்பது உங்களுக்கு தெரியுமா? குழந்தைகள் உதைக்கும் ஒவ்வொரு உதையும் அவர்கள் உங்களிடம் ஏதோ ஒன்று சொல்ல வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதே மாதிரி நீங்கள் பேசும் போதும் அவர்கள் செவி கொடுத்து கேட்பதும் உண்டு. அம்மாவின் உணர்வுகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு புரியும். அதே மாதிரி வயிற்றில் வளரும் ஒரு குழந்தையின் உதைக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளையும் நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தையின் ஆரோக்கியம்
வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் நல்ல ஆரோக்கியமாக இருப்பதை காட்ட உதைப்பது உண்டு. உதைத்தல் செயல் உங்கள் குழந்தை உயிருடன் இருப்பதை காட்டுகிறது. குழந்தை உங்கள் வயிற்றில் சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. இது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவின் சுவை
பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் காரமான உணவுகளை விரும்புவதில்லை. அம்மா சாப்பிட்ட உணவு குழந்தைக்கு மிகவும் பிடித்து இருந்தால் குழந்தை உதைப்பது உண்டு. அம்மா சாப்பிட்ட உணவு சுவையானதாகவும், அருமையாக இருப்பதை இது காட்டுகிறது. உங்கள் குழந்தை அதை விரும்புவதை உதைத்தல் மூலம் வெளிப்படுத்துகிறது.
குழந்தையின் அளவு
வயிற்றில் வளரும் குழந்தையின் கால் மற்றும் கைகளின் வளர்ச்சி மேம்படும் போது குழந்தை வயிற்றினுள் நல்ல வளர்ச்சி அடைகிறது. இதனால் தான் கால் மற்றும் கைகளை நன்றாக நீட்டி உதைக்க தொடங்குகின்றனர்.
குழந்தை உங்களை கவனிக்கிறது
18 வது வாரத்தில், குழந்தையின் காதுகள் பக்கவாட்டில் நிற்க ஆரம்பித்து அதன் செவித்திறன் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசும் போது குழந்தை உதைப்பதை பதிலாக வெளிப்படுத்துகிறது. இப்போது நீங்கள் சொல்வதை குழந்தை கேட்கிறது என்று அர்த்தம்.
இரண்டாவது மூன்று மாத தொடக்கம்
பொதுவாக உங்கள் குழந்தை 16 வது வாரத்திலிருந்து 25 வது வாரத்திற்கு இடையில் உதைக்க ஆரம்பிக்கும். இது உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிலை இரண்டாவது மூன்று மாத தொடக்கத்தில் இருப்பதை காட்டுகிறது.
குழந்தைக்கு அபாயம்
குழந்தை அதிகமாக உதைத்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இதுவே குழந்தை உதைத்தலின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதோ சரியில்லை மற்றும் உடனே மகப்பேறு மருத்துவரை சந்தித்து உடனடி சிகிச்சை பெறுவது நல்லது.
மூன்றாவது மூன்று மாதங்கள்
உங்கள் குழந்தையின் உதைகள் வழக்கமானதாக இருந்தாலும், இரண்டாவது மூன்று மாதங்களை விட , மூன்றாவது மூன்று மாதங்களில் அவை மிகவும் தீவிரமடைகின்றன. இந்த மாதத்தில் வயிற்றில் கை வைத்து குழந்தையின் அசைவுகளை நீங்கள் உணர முடியும்.
குழந்தையால் இப்பொழுது பார்க்க முடியும்
இப்பொழுது நீங்கள் வயிற்றில் ஒளியை காட்டும் போது உங்கள் குழந்தை அதை பார்க்க தொடங்கும். 33 வது வாரத்தில் உங்கள் குழந்தையின் கண்கள் நன்கு வளர்ச்சி அடைந்து கண் பார்வை மேம்படுகிறது. குழந்தை ஒளியை பார்க்க முடியும் என்பதை காட்ட உதைக்க ஆரம்பிக்கிறது.
விழித்திருக்கும் குழந்தை
25 வது வாரத்தில் உங்கள் குழந்தை தூங்க கற்றுக் கொள்கிறது. அந்த சமயத்தில் விரைவான கண் இயக்கம் இருக்கும். குழந்தை தூக்கத்தில் மட்டுமே அதிக நேரத்தை செலவிடும். எனவே குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது உதைக்காது. அதுவே குழந்தை விழித்திருக்கும் போது உதைத்தலை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.
குழந்தைக்கு விக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம்
குழந்தை செய்யும் எல்லா உதைகளும் உதைகள் அல்ல. 30 விநாடிகளுக்கு மேல் நீடிக்க கூடிய மெதுவான மற்றும் தாள உதைகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குழந்தை விக்கல்களை அனுபவித்து இருக்கக்கூடும். கருவறை சிறியதாக இருப்பதால் குழந்தை போதிய இட வசதி இல்லாமல் உதைத்தலில் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications