Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
சுகப்பிரசவம் ஏற்பட கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
Pregnancy Tips In Tamil: பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலையே தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். அதற்காக அவர்கள் நிறைய முயற்சிகளையும் எடுப்பார்கள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது முதல் கர்ப்ப கால உடற்பயிற்சிகள் வரை அவர்கள் அதைச் செய்வது உண்டு.
கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுமார் 450-500 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. ஏனெனில் கருப்பையில் வளரும் குழந்தை தாயின் உடலில் இருந்து தான் உணவைப் பெறுகிறது.

எனவே இந்த காலத்தில் பெண்கள் சுகப்பிரசவம் ஏற்பட நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம் ஆகிறது. அந்த வகையில் உங்கள் சுகப்பிரசவம் ஏற்பட கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
பருப்பு மற்றும் உலர்ந்த பீன்ஸ் வகைகள்
பிரசவத்தின் முந்தைய நாட்களில் உடலுக்கு புரதத்தின் தேவையானது அதிகரிக்கிறது. எனவே பிரசவத்திற்கு அருகில் இருக்கும் பெண்கள் புரத வகை உணவுகளான பருப்பு மற்றும் உலர்ந்த பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டு வரலாம். ஒரு கப் பருப்பு 15 கிராம் அளவிற்கு புரதத்தை வழங்குகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழங்கள்
பிரசவத்திற்கு ஆரஞ்சு பழங்கள் மிகவும் முக்கியமானது. இதில் 90% அளவிற்கு நீர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலின் புரத தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இதில் அதிகளவு வைட்டமின் சி காணப்படுவதால் குழந்தையின் சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்றுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை தடுக்கவும் உதவுகிறது.
பால் மற்றும் பால் பொருட்கள்
பால் நம் உடலுக்கு தேவையான பல வகை ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதங்கள் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்வது சுகப்பிரசவம் ஏற்பட வழி வகுக்கிறது. வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. பாலில் இருக்கும் புரோபயாடிக் பாக்டீரியா செரிமான செயல்முறைகளை எளிதாக்குகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த கொழுப்புள்ள பாலை தேர்ந்தெடுத்து அருந்தி வரலாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்குகள்
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளில் பீட்டா கரோட்டீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தை அளிக்கிறது. இது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது குழந்தையின் வெவ்வேறு செல்கள் மற்றும் திசுக்களை வேறுபடுத்த உதவுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் வைட்டமின் ஏ உட்கொள்ளுதலை 40% அதிகரிக்க வேண்டும். எனவே சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவது நல்லது.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி உங்கள் உடலுக்கு தேவையான போலேட், கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை வழங்குகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த சத்துக்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது. ப்ராக்கோலியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது பிரசவத்திற்கு முன்பு ஏற்படும் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
மெலிந்த இறைச்சி வகைகள்
மெலிந்த இறைச்சிகளில் நிறைய இரும்புச்சத்துக்கள் காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து தேவையானது இரட்டிப்பாக இருக்கும். எனவே எளிதில் சீரணிக்க கூடிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். எனவே மெலிந்த இறைச்சி வகை உணவுகளை எடுத்துக் கொண்டு வாருங்கள்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் ஆற்றல் நிறைந்த உணவுவகையாகும். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது. இதன் மூலம் பிரசவ காலத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க முடியும். மேலும் பிரசவத்தின் போது ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் காலை உணவாக வாழைப்பழங்களை சேர்த்து வரலாம்.
சீஸ் வகை உணவுகள்
சீஸ் வகை உணவுகள் உடலுக்கு தேவையான நல்ல கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகிறது. ஒரு அவுன்ஸ் பாலாடைக்கட்டியில் சுமார் 200 கிராம் அளவிற்கு கால்சியம் காணப்படுகிறது. இது உங்களுக்கு சுகப்பிரசவத்தை வழங்க உதவி செய்யும்.
முட்டைகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் முட்டைகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. முட்டைகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. முட்டையில் நிறைய அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. எனவே காலை மற்றும் மதிய உணவிற்கு முட்டைகளை எடுத்துக் கொண்டு வரலாம்.
கீரை வகைகள்
கீரையில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். கீரைகளில் நிறைய இரும்புச் சத்துக்கள், கால்சியம், போலேட் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாக செயல்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் உணவில் கீரைகளை சேர்த்து வருவது நல்லது. குழந்தையின் வளர்ச்சி மேம்பட்டு சுகப்பிரசவம் உண்டாக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











