For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் கருவறைக்குள் குழந்தைகள் ஏன் உதைக்கிறார்கள்? எப்போது உதைக்க ஆரம்பிப்பார்கள்?

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு தங்கள் கருவுக்குள் இருக்கும் சிசுக்கள் முதல் முறையாக அசையும் போது ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

|

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு தங்கள் கருவுக்குள் இருக்கும் சிசுக்கள் முதல் முறையாக அசையும் போது ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த சிசுக்களின் குட்டிக் குட்டி அசைவுகள், அவர்கள் கருவறைக்குள் நலமுடன் வளர்ந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Why Babies Kick In The Womb And When It Starts?

அவர்கள் ஏன் அவ்வாறு உதைக்கிறார்கள்? அவர்கள் எப்போது முதன்முறையாக அசையத் தொடங்குகின்றனர்? ஒருவேளை அவர்களுக்கு அசைவுகள் இல்லையென்றால் உடனே ஏன் அதிகக் கவனத்துடன் பார்க்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.

MOST READ: நற்செய்தி! இந்த டயட் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் - ஆய்வில் தகவல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிசுக்களின் அசைவுகள் எலும்புகளை வடிவமைக்கின்றன

சிசுக்களின் அசைவுகள் எலும்புகளை வடிவமைக்கின்றன

தாயின் கருவுறைக்குள் போதுமான இடம் இல்லாததால் சிசுக்கள் உதைக்கிறார்கள் என்று நினைக்கக்கூடாது. மாறாக அவர்கள் கருவறைக்குள் நன்றாக வளர்ந்து வருவதால் உதைக்கிறார்கள் என்பதே உண்மை. கருவறைக்குள் குழந்தைகள் செய்யும் முறுக்குதல், திரும்புதல், உருளுதல் மற்றும் குட்டிக்கரணம் போடுதல் போன்றவை அவர்களின் வளரும் சிறிய எலும்புகளை நன்றாக வடிவமைக்கின்றன.

எப்போது உதைக்க ஆரம்பிக்கிறார்கள்?

எப்போது உதைக்க ஆரம்பிக்கிறார்கள்?

பொதுவாக 20 முதல் 30 வாரங்கள் வரை வளர்ச்சி பெற்ற சிசுக்கள் அதிகமாக உதைக்கின்றனர். அதாவது இந்த காலம்தான் கர்ப்ப காலத்தின் நடுப்பகுதியாகும். கர்ப்ப காலத்தின் நடுப்பகுதியில் தான் சிசுக்களின் எழும்புகள் மற்றும் மூட்டுகள் சரியான வடிவத்தைப் பெறத் தொடங்குகின்றன. கர்ப்ப காலத்தின் நடுப்பகுதியில் உதைக்காத குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருவறைக்குள் இருக்கும் சிசுக்கள் உதைப்பதால் அவர்களின் நரம்பியல் சம்பந்தமான வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் சிசுக்களிடம் அசைவுகள் இல்லையென்றால் அவர்களுக்கு நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்கான உறுதியான முடிவுகளை ஆய்வுகள் தெரிவிக்கவில்லை. ஆகவே கருவறைக்குள் இருக்கும் சிசுக்கள் சற்று ஓங்கி உதைத்தாலும் அவர்களின் அம்மாக்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் உங்களின் குழந்தைகள் உங்கள் வயிற்றில் ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறாா்கள் என்று நீங்கள் மகிழ வேண்டும்.

கருவில் இருக்கும் சிசுக்கள் உதைப்பது எப்போது தெரிய வரும்?

கருவில் இருக்கும் சிசுக்கள் உதைப்பது எப்போது தெரிய வரும்?

முதல் முறையாகக் கருவுற்றிருக்கும் பெண்கள் 16 முதல் 25 வாரங்களுக்கு இடையே (கர்ப்ப காலத்தின் இரண்டாவது 3 மாதங்கள்) அவர்களின் குழந்தைகள் உதைப்பதை முதல் முறையாக உணர்வார்கள். சிசுக்கள் உதைப்பதை முதல் முறையாக உணரும் போது அவர்களுக்கு அதிமான படபடப்பு ஏற்படும். மேலும் அவர்களுடைய அடிவயிற்றில் பலவிதமான விசித்திரமான உணர்வுகள் ஏற்படும். ஆனால் இதை நினைத்து கவலைப்படத் தேவையில்லை.

கர்ப்ப காலத்தின் 25 வாரங்களுக்கு மேல் செல்லும் போது சிசுக்களின் அசைவுகள் சீராக இருக்க வேண்டும். இதுவரை மிகச் சிறிய அளவில் இருந்த அவர்களின் அசைவுகள் இந்த காலத்தில் மிக உறுதியாகவும் வலிமையாகவும் இருக்கும். இந்த காலத்தில் சிசுக்கள் விக்கல் எடுக்கும் போது அவர்கள் இழுப்பதைப் போல பெண்கள் உணர்வார்கள். ஏறக்குறைய 36-வது வாரத்தை நெருங்கும் போது சிசுக்கள் உதைப்பது மெதுவாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் அப்போது கருப்பை பெரிதாகி கருவில் வளர்ந்து வரும் குழந்தையை வெளியில் தள்ளுவதற்கு தயாராகும்.

கருவில் இருக்கும் சிசுக்களின் அசைவுகளை ஏன் கண்காணிக்க வேண்டும்?

கருவில் இருக்கும் சிசுக்களின் அசைவுகளை ஏன் கண்காணிக்க வேண்டும்?

பொதுவாக கருவுற்ற 28வது வாரத்திலிருந்து (3வது மூன்று மாதங்கள்) சிசுவின் அசைவுகளைத் தினமும் கண்காணிக்கத் தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சிசுக்களின் தினசரி அசைவுகளைக் காண்காணிக்க பொதுவான முறை ஒன்று இருக்கிறது. அதாவது சிசுக்கள் 10 அசைவுகளை வெளிப்படுத்த எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கின்றனர் என்பதைக் கண்காணிப்பதாகும். ஒருவேளை சிசுக்கள் ஒரு மணி நேரத்தில் 10க்கும் குறைவான அசைவுகளை வெளிப்படுத்தினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எப்போது சிசுக்கள் அதிகம் உதைப்பார்கள்?

எப்போது சிசுக்கள் அதிகம் உதைப்பார்கள்?

பெரும்பாலும் கருவில் இருக்கும் குழந்தைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் உட்கார்ந்து இருக்கும் போதோ அல்லது படுத்து இருக்கும் போதோ தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் உதைகளை மிக தெளிவாக உணர முடியும். ஒருசில குழந்தைகள் இயற்கையாகவே மற்ற குழந்தைகளை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உதைப்பர். ஆகவே கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் இயல்பை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வழக்கமாக காலையில் உதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் சிசு ஒன்று, 3வது மூன்று மாத காலத்தில் ஒரு நாள் காலையில் உதைக்கவில்லை என்றாலும் உடனே அதைக் கண்காணிக்க வேண்டும். ஒரு மணி நேரமாகியும் குழந்தை உதைக்கவில்லை என்றால் பழச்சாறு அல்லது ஏதாவது ஒரு இனிப்பு கலந்த பானத்தை அருந்தலாம், அல்லது உங்களுக்கு ஏற்றவாறு ஒருபக்கமாக ஒரு மணிநேரம் வரை படுத்து இருக்கலாம்.

கர்ப்பிணிகள் ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது?

கர்ப்பிணிகள் ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது?

தாமதமாக கருவுற்றிருக்கும் பெண்கள் மல்லாக்கப் படுத்திருந்தால் அவர்கள் வயிற்றில் இருக்கும் சிசுக்கள் அசைவற்று இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அவர்கள் அவ்வாறு படுத்து இருக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் சிசுக்கள் அசைவற்று இருக்கின்றனர். ஆகவே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உங்கள் குழந்தை அசைவற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Babies Kick In The Womb And When It Starts?

Why babies kick in the womb and when it starts? Read on to know more...
Desktop Bottom Promotion