Just In
- 15 min ago
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- 44 min ago
உங்க துணையோட உடம்புல நீங்க எந்தெந்த இடத்துல குடுக்குற முத்தத்துக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா?
- 1 hr ago
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- 2 hrs ago
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம் தெரியுமா?
Don't Miss
- Movies
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- News
முழு பாஜகவாக மாறிய திமுக... இந்த கொடுமை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கே - சீமான்
- Sports
என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!
- Finance
Budget 2021.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்!
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது தெரியுமா?
கார்த்திகை மாதம் 29 ஆம் நாள், டிசம்பர் 14 ஆம் தேதி திங்கட்கிழமை, அமாவாசை திதியில், கேட்டை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றும் அதற்கான காரணங்களையும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வீட்டை விட்டு வெளியே போகாதீங்க
கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராகு கேது மறைப்பு
சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

கிரகண நேரத்தில் என்ன செய்யக்கூடாது
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.

கர்ப்பிணிகள் சாப்பிடாதீங்க
வீட்டில் சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிரகணம் முடிந்த பின்னர் பரிகாரம் முடிந்த பின்னர் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கர்ப்பிணிகள் காய்கறி வெட்டாதீங்க
கிரகண நேரத்தில் சாப்பிடாதீங்க. கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் கூர்மையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது, கத்தரி கொண்டு துணிகளை வெட்டக்கூடாது என்றும் அதையும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை `கிரகணமூலி' என்றும் சொல்கிறார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.