Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
கர்ப்பகாலத்தில் இந்த சரும பராமரிப்பு தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க...இது உங்க குழந்தையை பாதிக்குமாம்!
கர்ப்ப காலத்தில் ஹைட்ரோகுவினோனைப் பயன்படுத்துவதும் தீங்கு விளைவிக்கும். இது பொதுவாக வயதான எதிர்ப்பு கிரீம்களில் நிறமியைக் குறைக்கப் பயன்படுகிறது.
கர்ப்ப காலத்தில், நீங்கள் இன்னொரு உயிரை சுமப்பதினால், தோல் மற்றும் முடி உட்பட முழு உடலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையானது. கர்ப்ப காலத்தில் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், நீங்கள் எந்த விஷயம் செய்தாலும், கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பம் என்பது ஒரு உணர்திறன் வாய்ந்த காலமாகும். குறிப்பாக சில இரசாயனங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு வரும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் கருவின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய தோல் பராமரிப்பு தவறுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ரெட்டினோல் பயன்படுத்த வேண்டாம்
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது எந்தவொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும். அவற்றில் உங்கள் சரும பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்வதும் அடங்கும். கர்ப்ப காலத்தில், அடாபலீன், ரெட்டினால்டிஹைட் மற்றும் ட்ரெட்டினோயின் போன்ற எந்த வகையான ரெட்டினோலைப் பயன்படுத்துவதும் மிகப்பெரிய தோல் பராமரிப்பு தவறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இவை உங்கள் கருவின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

ஹைட்ரோகுவினோனைத் தவிர்க்கவும்
கர்ப்ப காலத்தில் ஹைட்ரோகுவினோனைப் பயன்படுத்துவதும் தீங்கு விளைவிக்கும். இது பொதுவாக வயதான எதிர்ப்பு கிரீம்களில் நிறமியைக் குறைக்கப் பயன்படுகிறது. இந்த மூலப்பொருள் இரத்த ஓட்டத்தில் ஊடுருவுகிறது. இது உங்கள் சிசுவின் வளர்ச்சியையே பாதிக்கலாம். அதனால், இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல.

ஈரப்பதமாக்க மறக்காதீர்கள்
கர்ப்ப காலத்தில் தோல் மிகவும் வறண்டு போகும் என்பதால், அதை தவிர்க்க உங்கள் உடலையும் முகத்தையும் ஈரப்பதமாக்குவதை நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் நீரேற்றமாக இருங்கள்.

சன்ஸ்கிரீனை புறக்கணிக்காதீர்கள்
கர்ப்ப காலத்தில் சூரிய ஒளி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக வாய், அக்குள், கழுத்து மற்றும் இடுப்பு (அனைத்து உராய்வு பகுதிகள்) சுற்றி நிறமி உருவாக்குவது பொதுவானது. கர்ப்ப காலத்தில், குறிப்பாக இந்திய தோல் வகைகளைக் கொண்ட பெண்களுக்கு, நிறமியின் அதிக போக்கு உள்ளது. வீட்டிற்குள் வெயிலாக இருந்தாலும், ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் போதுமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்
சரும பராமரிப்பில் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் கொலாஜன் மற்றும் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்தப் பழகினாலும், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். ஏனெனில், கர்ப்பகாலத்தில் நீங்கள் கண்மூடித்தனமாக எந்த கூடுதல் மருந்துகளையும் எடுக்கக்கூடாது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது உங்கள் சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

லேசர் சிகிச்சையைத் தவிர்க்கவும்
கர்ப்ப காலத்தில் சுத்தப்படுத்துதல் மற்றும் மசாஜ் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழக்கமான தோல் பராமரிப்பு முறைகளை தொடர்ந்து செய்யலாம். ஏனெனில் இது உங்கள் சரும நீரேற்றத்திற்கு உதவும். இயற்கையான சரும பராமரிப்பு முறைகளை நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் இயந்திரங்கள் மற்றும் லேசர் சிகிச்சைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி, கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் மற்றும் பென்சாயில் பெராக்சைடு போன்ற பொருட்கள் பயன்படுத்த பாதுகாப்பானவை.



Click it and Unblock the Notifications