For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகாலத்தில் ஏற்படும் மன உளைச்சல் இவ்வளவு பாதிப்ப ஏற்படுத்துதா ? அதற்கான எளிமையான தீர்வுகள்

|

கர்ப்பகாலத்தின் போது அலைபாயும் குரங்குகளை போல் மனம் அங்கும் இங்கும் அலைபாயும். திடீரென கோபம் வரும், காரணமே தெரியாமல் மனச்சோர்வு அடையும், இப்படி திடீர் திடீரென்று மனமாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கும்.

Mood Swings During Pregnancy

கர்ப்பகாலத்தின் போதான ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றங்களால் தான் இவை நடைபெறுகின்றன. இது நடைபெறாமலே தடுக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது. ஆனால் இதனை கட்டுப்படுத்த முடியும். இது போன்ற மன அழுத்தங்கள் வயிற்றுள்ள குழந்தையை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தக் கட்டுரை உங்களுக்கான தீர்வாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட் ஸ்விங்கிற்கான காரணங்கள்

மூட் ஸ்விங்கிற்கான காரணங்கள்

உடல் மற்றும் மனம் சார்ந்து ஏற்படுகிற மாற்றங்கள் மனநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. எந்தெந்த காரணங்கள் மூட் ஸ்விங் ஆகிறது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

Most Read: சிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ?ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது

ஹார்மோன் ஏற்ற இறக்கம்

ஹார்மோன் ஏற்ற இறக்கம்

ஹார்மோன்களில் ஏற்படுகிற ஏற்ற இறக்க மாறுபாடுகளே மனநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ப்ரோஸ்ட்ரோசன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற கர்ப்பகால ஹார்மோன்கள் அதிகரிப்பது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் தான் கவலை, சோகம், பயம் மற்றும் விரக்தி போன்ற மனமாற்றங்கள் ஏற்படுகிறது. இது மனசோர்வுக்கு காரணமாக அமைகிறது.

மிகுந்த சோர்வு

மிகுந்த சோர்வு

காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சி இல்லாமல் உடல் சோர்வாகவே இருந்தல வேற எந்த வேலையும் ஓடாது. இது கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு இதை அனுபவிக்கும் சூழ்நிலை இருக்கும். இந்தச் சோர்வு பயம், மறதி, கவலை, போன்ற மனமாற்றக் கலவைகளை பெண்களுக்கு ஏற்படுத்தும்

தூக்கமின்மை

தூக்கமின்மை

பெருகி வரும் உங்களது தொப்பை மற்றும் கர்ப்பகால மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. குறைந்த தூக்கமானது உங்களுக்கு எரிச்சலையும், வெறித்தனத்தையும் ஏற்படுத்தும்.

உடல்நிலை

உடல்நிலை

கர்பகாலத்தில் ஏற்படும் இரத்த சோகை, கர்ப்பகால நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டு போன்றவையும் மனநிலை மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. பயம், மன அழுத்தம், எரிச்சல், சோர்வு போன்றவற்றை இது ஏற்படுத்துகிறது.

எப்படிக் கையாள்வது

எப்படிக் கையாள்வது

மனநிலை மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம் வாழ்க்கைமுறை மாற்றங்களும், உணவுப் பழக்கமும் தான். முறையான உணவும், வாழ்க்கைமுறையில் மாற்றங்களையும் ஏற்படுத்தினால் மூட் ஸ்விங்கில் இருந்து எளிதாக விடுபடலாம்.

Most Read: பிறந்த குழந்தைகளுக்கு கொசுவிரட்டிகள் பாதுகாப்பானதா ? இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க

தியானம் மற்றும் யோகா

தியானம் மற்றும் யோகா

சோகம், கவலை போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு சிறந்த தீர்வு யோகா மற்றும் தியானம் ஆகும். ஏனெனில் இங்கு தான் மனதை ஒருநிலைப் படுத்துவதற்கான பயிற்சிகள் செய்யப்படுகின்றன.

நன்றாகத் தூங்குங்கள்

நன்றாகத் தூங்குங்கள்

மனிதன் நன்றாகத் தூங்கி எழுந்து முறையாக கழிவுகளை வெளியேற்றுகிறான் என்றால் அவன் தான் ஆரோக்கியமான வாழ்வியலை வாழ்கிறான் என்று அர்த்தம். எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறக்கம் என்பது மிகவும் அவசியமாகிறது. நல்ல தூக்கம் வருவதற்கு தளர்வான உடைகளை அணியுங்கள், நல்ல தலையணையை பயன்படுத்துங்கள், தூங்கப் போவதற்கு முன் போன், தொலைக்காட்சி போன்றவற்றை பார்க்காதீர்கள், இது போதும் உங்களுக்கு தூக்கத்தை வரவழைப்பதற்கு.

மசாஜ்

மசாஜ்

பிரசவகாலத்துக்கு முன்னாள் செய்யக்கூடிய மஜாஜ்களை செய்ய வேண்டும். இது தசைகளை தளர்த்தி வலிகளுக்கு தீர்வு தருகிறது. அதுமட்டுமில்லாமல் இது நிணநீர் சுரப்பியை இயங்க வைத்து மனநிலை மாற்றங்களில் இருந்து தீர்வை அளிக்கிறது.

பிடித்ததை செய்யுங்கள்

பிடித்ததை செய்யுங்கள்

மிகச் சுலபமாக உங்கள் மனம் எதைச் செய்தால் சந்தோசமாக இருக்குமோ அதை செய்யுங்கள். உதாரணமாக ஷாப்பிங், படம் பாருங்கள், கணவருடன் கைக் கோர்த்து நடத்தல் , விரும்பியதை உண்ணல், போன்றவற்றை செய்யுங்கள். இது போன்ற உங்களுக்கு சின்ன சின்ன சந்தோசங்களைத் தரும் விசயங்களில் ஈடுபடுங்கள்.

கணவருடன் பேசுங்கள்

கணவருடன் பேசுங்கள்

எவ்வளவு கவலையாக இருந்தால் சிலருடன் பேசும் போது அது சிட்டாய் பறந்துவிடும். அதுவும் நமக்கானவருடன் பேசுகிறோம் என்றால் சும்மாவா.. அவர் மடியில் படுத்துக் கொண்டு உங்கள் தலையை கோதி விடும் போது வருகிற சுகம் வேறு எதில் கிடைத்துவிடும். இதற்கப்பறம் கவலையாவது மண்ணாங்கட்டியாவது.

குழந்தை பிறப்பை பற்றிக் கவலைப்படாதீர்கள்

குழந்தை பிறப்பை பற்றிக் கவலைப்படாதீர்கள்

முதல் பிரசவம் என்பது பெண்களுக்கு புதிய அனுபவம் இல்லையா? அதனால் பாதுகாப்புக் குறித்து எண்ணற்ற கேள்விகள் இருந்துக் கொண்டே இருக்கும் அல்லவா? அதைப்பற்றிக் கவலைப் படுவதெல்லாம் நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக நடந்துக் கொண்டாலே போதும்.

Most Read : தாய்ப்பாலூட்டும் தாய்களுக்கு குடம்புளி பாதுகாப்பானதா? உங்கள் சுயநலம் குழந்தைகளுக்கு பேராபத்து

ஆரோக்கியமாக இருங்கள்

ஆரோக்கியமாக இருங்கள்

கர்ப்பகாலத்தில் ஏற்படுகிற தசை வலிகள் போன்றவை அசதியை பெண்களுக்கு தந்துவிடும். இதன் கூடுதலாக வேறு நோய்ப் பாதிப்பும் இருப்பது அவர்களின் மனச்சுமையை மேலும் அதிகப்படுத்தும். மருத்துவரை ஆலோசித்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் இதற்கு சிறந்த மருத்துவமாக இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mood Swings During Pregnancy- Causes And How to Manage

Mood swings are common during pregnancy, owing to the hormonal, physical, and emotional changes happening within you. While you cannot avoid them, you can deal with them to make your pregnancy less stressful.
Story first published: Monday, August 5, 2019, 13:09 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more