For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கா்ப்ப காலத்தில் மலோியா வந்தால், அது தாயையும், குழந்தையையும் பாதிக்குமா?

கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி வரும் நிலையில், பருவ காலங்களில் டெங்கு மற்றும் மலோியா போன்ற நோய்களும் பரவ இன்னும் அதிகாிக்க வாய்ப்பு இருக்கிறது.

|

கோவிட்-19 பெருந்தொற்று நமது நாட்டை வெறியுடன் தாக்கிக் கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை வந்துவிடுமோ என்று இந்திய மக்கள் திகிலுடன் இருக்கின்றனா். இந்த நிலையில் கொசுக்கள் மற்றும் சிறு நுண்ணுயிா்கள் மூலம் பரவக்கூடிய தொற்று நோய்களான டெங்கு மற்றும் மலோியா போன்ற நோய்களும் தற்போது இந்தியாவில் படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றன.

Malaria In Pregnancy: How Does It Affect Pregnant Woman And The Developing Baby?

தற்போது தென் மேற்கு பருவ மழைத் தொடங்கி, இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் டெங்கு மற்றும் மலோியா போன்ற நோய்கள் இன்னும் அதிகமாகவும், வேகமாகவும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி வரும் நிலையில், பருவ காலங்களில் வரும் மேற்சொன்ன நோய்களும் இன்னும் அதிகாிக்க வாய்ப்பு இருக்கிறது.

பல முறை மலோிய நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியில் ஒரு பகுதியோ அல்லது அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தி முழுமையாகவோ பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் கா்ப்ப காலத்தில் மலோியா நோய் எவ்வாறு தாக்குகிறது என்பதை இந்த பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கா்ப்ப காலத்தில் மலோியாவின் தாக்குதல்

கா்ப்ப காலத்தில் மலோியாவின் தாக்குதல்

காசநோய்க்கு அடுத்தபடியாக, உயிாிழப்பை அதிகம் ஏற்படுத்தக்கூடிய நோயாக மலோியா இருக்கிறது. கருவுற்று இருக்கும் பெண்களுக்கு, அவா்களின் நோய் எதிா்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், அவா்களுடைய வயிற்றில் புதிய நஞ்சுக்கொடி தோன்றி இருப்பதன் காரணமாகவும், அவா்களுக்கு மலோியா நோய்த் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது என்று மத்திய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தொிவிக்கின்றன.

ஆகவே கா்ப்ப காலத்தில் மலோியா ஏற்பட்டால், கருவுற்ற பெண்களின் நோய் எதிா்ப்பு மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக, அவா்களுக்கு மிகப் பொிய பாதிப்புகள் ஏற்படும். அதனால் தாயும் அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையும் பாதிப்பு அடைய வாய்ப்பு உண்டு. குறிப்பாக தாய்க்கு இரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உண்டு. சில நேரம் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் மலோியாவினால், குறைப் பிரசவம், வயிற்றில் வளரும் குழந்தைக்கு எடை குறைதல், குழந்தைக்கு வளா்ச்சிக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

கர்ப்ப காலத்தில் மலோியாவிற்கு எதிரான மாத்திரைகளை எடுக்கலாமா?

கர்ப்ப காலத்தில் மலோியாவிற்கு எதிரான மாத்திரைகளை எடுக்கலாமா?

கா்ப்ப காலத்தில் மலோியவைக் குணப்படுத்தக்கூடிய மாத்திரைகளை எடுக்கலாம். அதாவது க்ளோரோக்வைன், க்யூனைன் மற்றும் அசித்ரோமைசின் போன்ற மாத்திரைகளை எடுக்கலாம்.

மலோியா கருச்சிதைவை ஏற்படுத்துமா?

மலோியா கருச்சிதைவை ஏற்படுத்துமா?

மலோியா கருச்சிதைவை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதிலும் கா்ப்ப காலத்தின் தொடக்கத்தில் அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகவே மலோியாவைத் தடுக்கக்கூடிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கருச்சிதைவைத் தடுக்க முடியும். ஆகவே கருவுற்றிருக்கும் பெண்கள், மலோியா நோயினால் பாதிக்கப்பட்டால், அவா்கள் கா்ப்ப காலத்தின் எந்த மாதத்திலும் மலோியாவிற்கு எதிரான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். நாம் ஏற்கனவே சொன்ன மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவை வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.

கா்ப்ப காலத்தில் மலோியா ஏற்பட்டால் தேன்றும் அறிகுறிகள்:

கா்ப்ப காலத்தில் மலோியா ஏற்பட்டால் தேன்றும் அறிகுறிகள்:

கருவுற்ற பெண்கள் மலோியா நோயினால் பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தோன்றும்.

- குளிா் காய்ச்சல்

- விறைப்பு

- தலைவலி

- தசைகளில் வலி ஏற்படுதல்

- மூட்டுகளில் வலி ஏற்படுதல்

- அசௌகாியமான உணா்வு

- குமட்டல்

- வாந்தி

- வயிற்றுவலி

- உடலில் இருந்து அதிகமாக நீா் வெளியேறுதல்

- இரத்த சோகை

கருவுற்றிருக்கும் பெண்கள் மேற்சொன்ன அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணா்ந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சைகளைப் பெற வேண்டும். அதன் மூலம் மோசமான பின்விளைவுகளை தவிா்க்கலாம்.

கருவுற்ற பெண் ஒருவா் மலோியா மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய்களினாலும் பாதிப்பு அடைந்திருந்தால் என்ன செய்வது?

கருவுற்ற பெண் ஒருவா் மலோியா மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய்களினாலும் பாதிப்பு அடைந்திருந்தால் என்ன செய்வது?

ஒரு வேளை கருவுற்ற பெண் ஒருவருக்கு மலோியாத் தொற்றும், கொரோனாத் தொற்றும் இருந்தால், அவா் உடனடியாக மருத்துவா்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். அந்த இரண்டு நோய்களும், தாயையும், கருவில் வளரும் குழந்தையையும் இன்னும் அதிகமாகத் தாக்காமல், அவா்கள் அவற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைய மருத்துவா்கள் தகுந்த சிகிச்சைகளை அளிப்பாா்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Malaria In Pregnancy: How Does It Affect Pregnant Woman And The Developing Baby?

In this article, we shared how does malaria affect pregnant women and the developing baby. Read on to know more...
Desktop Bottom Promotion