For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் நார்த்தங்காய் சாப்பிட்டால் குழந்தைக்கு இந்த நோயெல்லாம் வருமாம்... சாப்பிடாதீங்க

குழந்தைக்கு பாதிப்பு ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. சில மூலிகைகளை உண்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.

By Mahibala
|

கருவுற்ற தாய்மார் இந்த விஷயத்தில் மிகவும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். சில மூலிகைகள் கருப்பை சுருங்குதலை தூண்டும். கர்ப்பப்பை சுருங்குவதால் கருச்சிதைவு, குறைபிரசவம் அல்லது கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. சில மூலிகைகளை உண்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இன்னும் சில பிறவி குறைபாடுகளை குழந்தைகளுக்கு உருவாக்கும்.

Avoid Citron Fruit

ஆர்கானிக் கடைகள் எங்கும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், இந்த இயற்கை வைத்தியம் செய்யவும் மக்கள் விரும்புகின்றனர். ஆனால், சரியான வழிகாட்டல் இல்லாமல் மூலிகைகளை உண்பது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கர்ப்ப காலத்தில் கற்றாழையை எடுத்துக்கொள்வது கருச்சிதைவுக்கு அல்லது குழந்தைக்கு பிறவி குறைபாடு உண்டாவதற்கு வழி செய்யும். இது தவிர பொட்டாசியம் குறைபாடு, இருதய கோளாறு, தசை பெலவீனம் ஆகியவற்றையும் நாளடைவில் கொண்டு வரும்.

MOST READ: ரத்த பரிசோதனை செய்யும்போது டாக்டர் நம்மிடம் மறைக்கும் பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

பூண்டு

பூண்டு

பூண்டு சேர்த்துக்கொள்வதும் கருப்பையை சுருங்கச் செய்யும். இது குறைபிரசவத்திற்கு காரணமாகும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

ஆல்டர் பக்தார்ன்

ஆல்டர் பக்தார்ன்

கர்ப்பிணிகளுக்கு வலியையும் குமட்டலையும் உருவாக்கக்கூடிய மூலிகை இது. அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும். பொங்கலுக்கு வாசலில் வைக்கப்படும் கூழைப்பூவோட பேரு தான் இது. கூழைப் பூ என்பது சங்க காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருந்த ஒரு வகை மூலிகைப்பூ

பார்பெர்ரி

பார்பெர்ரி

கருப்பையை அதிகமாக சுருங்க வைக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தை உருவாக்கும்.

வாந்தி, வலிப்பு, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா மற்றும் கருச்சிதைவுக்கு இந்த மூலிகை காரணமாகும். இது வேற எதுவும் இல்லங்க. நம்ம ஊர் சரக்கொன்றை தான்.

நார்த்தங்காய்

நார்த்தங்காய்

இருதய செயல்பாட்டில் கோளாறை உருவாக்கி, பக்கவாதத்தை கொண்டு வரும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும். எலுமிச்சை பொதுவாக கர்ப்ப காலத்தில் மிக நல்லது என்று சொல்வார்கள். ஏனென்றால் அந்த புளிப்புச் சுவை கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவற்றைச் சரி செய்யும். ஆனால் நார்த்தங்காய் நிச்சயம் சாப்பிடக் கூடாது. அது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நரம்புகளை பாதிக்கும். குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியில் கோளாறுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு.

MOST READ: சுப்பிரமணியன் கருப்பையா கவுண்டமணி ஆன கதை தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க...

மது

மது

மேலே கூறப்பட்ட மூலிகைகள் தவிர்த்து தாய்மைப்பேறு காலத்தில் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் நரம்பு மண்டலத்தை தாக்கி, மனநிலை கோளாறுகளை உருவாக்கும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆகவே, பயன்தரும் மூலிகைகளானாலும் கர்ப்ப காலத்தில் அவற்றை தவிர்ப்பதே நல்லது. கர்ப்பகாலத்தில் கவனமாக இருந்து தாய்மைபேறடைய வாழ்த்துகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Should You Avoid Citron Fruit During Pregnancy?

The natural world is full of wonders. Before modern medicine came to the limelight, people would use natural herbs and spices to fight illnesses and remain healthy.
Story first published: Monday, March 18, 2019, 18:18 [IST]
Desktop Bottom Promotion