For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப பரிசோதனைக்கு சிறந்த நேரம் இதுதான்... இப்போ பண்ணினாதான் ரிசல்ட் சரியா இருக்கும்...

கர்ப்ப பரிசோதனையை உரிய முறையில் செய்யவில்லை என்றால் பிரச்னை ஏற்பட்டுவிடும். அதனால் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள சிறந்த நேரம் எது என்பதை அறிய இந்த கட்டுரை உதவி செய்யும்.

By Vathimathi S
|

கர்ப்பம் தரிக்க முயற்சிப்பது அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதன் மூலம் மாதவிடாய் ஏற்பட தவறினால் உடனடியாக எல்லோரும் நான் கர்ப்பமா இருக்கிறேனா? என்ற கேள்வியை தான் கேட்டுக் கொள்வார்கள். கர்ப்ப பரிசோதனை சாதனத்தை வாங்கி வீட்டிலேயே பரிசோதனை செய்து பார்ப்பது தான் இதற்கு சிறந்த வழி.

pregnancy

ஆனால், இந்த கர்ப்ப பரிசோதனையை உரிய முறையில் செய்யவில்லை என்றால் பிரச்னை ஏற்பட்டுவிடும். அதனால் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள சிறந்த நேரம் எது என்பதை அறிய இந்த கட்டுரை உதவி செய்யும். அதோடு பரிசோதனை சாதனத்தில் தெரியும் பல விதமான கோடுகள் குறித்தும் இங்கு அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப பரிசோதனை என்றால் என்ன?

கர்ப்ப பரிசோதனை என்றால் என்ன?

சிறுநீரில் உள்ள ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஹீயூமன் சாரியோநிக் கோநாடாட்ரோபின் (ஹெச்சிஜி) அளவை கொண்டு அறியும் வகையில் அமைக்கப்பட்ட கர்ப்ப பரிசோதனை வடிவமைப்பாகும். கர்ப்ப பை வாயில் கரு முட்டைகள் உள்வைக்கப்பட்ட பின்னர் இந்த ஹார்மோன்கள் வெளியாகும். மேலும் 2 முதல் மூன்று நாட்களக்கு இது இரட்டிப்பாகி கொண்டே இருக்கும்.

உங்களது கர்ப்ப பரிசோதனையை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். அல்லது தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகியும் அறிந்து கொள்ளலாம். வீட்டில் சோதனை செய்யக்கூடிய கர்ப்ப பரிசோதனை சாதனம் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டால் அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் மருத்துவரை ச ந்தித்தால் அவர் ரத்த மாதிரி பரிசோதனை செய்யவார். சிறுநீர் பரிசோதனையை விட ரத்த பரிசோதனை மிக துல்லியமாக இருக்கும்.

உகந்த நேரம் எது?

உகந்த நேரம் எது?

எப்போது கர்ப்ப பரிசோதனை மேற்கெள்ள வேண்டும் என்று யோசித்து பாருங்கள்? மாதவிடாய் ஏற்படாமல் தள்ளிப் போகும் போது தான் உடனடியாக கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சில சமயங்களில் இது மாதவிடாய் ஏற்பட வேண்டிய ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே இது வேலை செய்ய தொடங்கிவிடும். மேலே குறிப்பிட்டப்படி கர்ப்ப பரிசோதனை சாதனம், கர்ப்பத்தின் போது உற்பத்தியான ஹெச்சிஜி ஹார்மோன்களை கண்டுபிடித்துவிடும்.

மாதவிடாய் ஏற்பட வேண்டிய நாளுக்கு முன்னரே இத்தகைய ஹார்மோன்கள் உங்களது உடலில் உற்பத்தியாகிவிடும். எனினும் மாதவிடாய் ஏற்பட வேண்டிய நாளுக்கு முன்னரே இந்த பரிசோதனையை மேற்கொள்வது ரொம்பவும் முன் கூட்டிய செய்யப்பட்ட பரிசோதனையாக தான் இருக்கும். இதன் மூலம் துல்லியமான முடிவை பெற முடியாது. இது நேர்மறையான முடிவை காட்டினாலும் கர்ப்பத்தை நோக்கிய வளர்ச்சியாக இல்லாமல் போகும். தன்னிச்சையான கருச்சிதைவு தான் இதற்கு காரணமாக இருக்கும்.

அதனால் மாதவிலக்கு தவறும் நாள் வரை காத்திருக்க வேண்டும்.

எப்போது துல்லியமாக இருக்கும்?

எப்போது துல்லியமாக இருக்கும்?

மாதவிடாய் தவறும் முதல் நாள் மற்றும் அதற்கு பின்னர் வீட்டில் மேற்கொள்ளப்படும் கர்ப்ப பரிசோதனை மூலம் 99 சதவீதம் சரியான முடிவை காட்டும். சிறுநீர் அதிக செறிவான தன்மையில் இருக்கும் காலை நேரம் தான் கர்ப்ப பரிசோதனை செய்ய உகந்த நேரமாகும்.

மாதவிடாய் ஏற்பட வேண்டிய காலத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்படும் பரிசோதன சரியான முடிவை தராது. அதேபோல் சாதனத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்றாலோ அல்லது காலாவதி ஆகியிரு ந்தாலோ சரியான முடிவை தராது.

காரணிகள்

காரணிகள்

. எப்படி அறிவுரைகளை பின்பற்றுகிறீர்கள்.

. எவ்வளவு விரைவாக கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

. எப்போது கர்ப்ப பையில் இருந்து முட்டையை தள்ளுகிறது மற்றும் உள்வைத்தலுக்கு எவ்வளவு நாள் எ டுத்துக் கொள்கிறது.

. கர்ப்ப பரிசோதனையை முன் கூட்டியோ அல்லது காலதாமதமாகவோ மேற்கொள்ளக் கூடாது. கருத்தரித்த சில நாட்கள் கழித்து தான் துல்லியமாக இருக்கும்.

. கர்ப்ப பரிசோதனை செய்ய சிறந்த நேரம் எப்போது (முன்கூட்டிய அறிகுறிகள்)

. கர்ப்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்று கவலை அடைவதை விட்டுவிட்டு வீட்டு பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பு சில அறிகுறிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

. கர்ப்ப பையில் ரத்த புள்ளி அல்லது லேசான ரத்த கசிவு ஏற்படும்.

. தசை பிடிப்பு அல்லது வயிற்றை இழுக்கும் விசித்திரமான உணர்வு.

. மார்பகங்களில் வலி அல்லது வீக்கம் இருத்தல். அவற்றை நீங்கள் தொடும்போதோ அல்லது பிரா அணியும் போதோ அசவுகர்யமாகவும் வேதனையாகவும் இருக்கும்.

. அசதியான உணர்வு இருக்கும். காரணமின்றி பூரண குணமில்லாத நிலை இருக்கும்.

. உயர்ந்த வாசனை உணர்வு இருக்கும்.

. உணவு பழக்க வழக்கத்தில் திடீர் மாற்றம். இதற்கு முன்பு சாப்பிட பிடிக்காத உணவு பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அல்லது பிடித்த உணவு வகைகள் பிடிக்காமல் போகும்.

. வாயில் மோசமான சுவை ஏற்படும்.

. வலியுடன் கூடிய வெள்ளைப்படுதல்.

. மலச்சிக்கல்

எந்த நாட்களில்?

எந்த நாட்களில்?

கருத்தரிப்புக்கு பின்னர், 7 முதல் 10 நாட்கள் வரை மேலே உள்ள அறிகுறிகள் இருக்கும். கருத்தரிப்பு குறித்து உறுதியாகாத நிலையில் இந்த அறிகுறிகளில் சிலவற்றோ அல்லது அனைத்து அறி குறிகள் இருந்தால் உடனடியாக கர்ப்ப பரிசோதனையை செய்துவிட வேண்டும்.

கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்பு இதில் உள்ள விதவிதமான பரிசோதனைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தை எப்படி முன்கூட்டியே கண்டுபிடிப்பது? என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனை

நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ள முடிவு செய்த நேரத்தில் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இந்த சோதனையை செய்துகொள்ளலாம். தனி பரிசோதனை சாதனம் இதற்கு மிகவும் சவுகர்யமானதாகும். பாலியல் உறவில் தீவிரமாக இருப்பவர்கள் மாதவிடாய் நாள் தள்ளிபோய் ஒரு வாரம் கழித்து இந்த பரிசோதனையை செய்ய வேண்டும்.

இந்த சாதனத்தில் துல்லியமான முடிவை பெற சில வழிமுறைகளை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டிரு க்கும். இந்த பரிசோதனையை ஒரு முறை மேற்கொண்ட பின்னர் கிடைக்கும் முடிவுக்கு ஏற்ப இது குறித்து டாக்டரிடம் ஆலோசனை செய்யலாம். இதன் பின்னர் கர்ப்ப நிலையை அறிந்து கொள்ள டாக்டர் மேலும் சில தீவிர பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்வார்.

எவ்வளவு நேரம்

எவ்வளவு நேரம்

இந்த பரிசோதனை வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? 5 முதல் 10 நிமிடத்தில் இதன் முடிவை அறிந்து கொள்ளலாம். 10 நிமிடங்களுக்கு மேல் பெறப்படும் முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் அதை புறக்கணித்து விட வேண்டும். 5 நிமிடங்களில் கிடைக்கும் முடிவை பார்த்துவிட வேண்டும். அது தான் துல்லியமான முடிவாக இருக்கும்.

உண்மையை அறிதல்

உண்மையை அறிதல்

பரிசோதனை முடிவில் நீங்கள் கர்ப்பம் என்பதை உறுதி செய்ய 2 கோடுகள் அந்த சாதனத்தில் பிரதிபலி க்கும். கட்டுப்பாட்டு கோட்டோடு 2வது கோடு தெரியும். சாதனத்தில் சிறுநீர் மாதிரியை செலுத்தியவுடன் 2வது கோடு தெரியும். சில சாதனங்களில் 2 திரைப்பகுதி இருக்கும். பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானால் இரு திரைகளிலும் கோடு தெரியும். சில சாதனங்ளில் நேர்மறையான முடிவை வெளிப்படுத்த குறுக்கு வடிவிலான திரைகள் இருக்கும். சில நேரங்களில் கர்ப்பம் இல்லை என்றாலும் நேர்மறையான முடிவை காட்டும் சம்பவங்களும் நடக்கும். இது தவறான முடிவாக கருதப்படும். இதற்கு சில காரணங்கள் உள்ளது.

தவறான முடிவு

தவறான முடிவு

. உங்களது சிறுநீரில் ரத்தம் அல்லது புரோடீன் இருக்கலாம்.

. வலி மறத்தல் மருந்து, மயக்க மருந்து, தூக்க மருந்து போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

. லூடினைசிங் ஹார்மோனின் பரபரப்பான நேரத்தில் ஹெச்சிஜி.யின் வெளிப்பாடு நடந்திருக்கலாம்.

. முந்தைய கருத்தரிப்பு அடுத்த மாதவிடாய் காலத்திற்குள் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கலாம். முன்கூட்டிய பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் தவறான கர்ப்ப முடிவை கண்டுபிடிக்கலாம்.

. 3 முதல் 5 ஆண்டுகள் வரை அதிகப்படியான அளவில் ஹெச்சிஜி ஹார்மோன் பெண்களுக்கு இருந்து குறையும் நிலையில் இருந்திருக்கலாம்.

. குழந்தையின்மைக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் சமயத்தில் தவறான நேர்மறை முடிவுகள் வெளிப்படலாம். ஹெச்சிஜி சிகிச்சை பெற்ற 10 நாட்களுக்குள் இந்த பரிசோதனை செய்திருந்தாலும் தவறான முடிவு காட்டும்.

எதிர்மறையான முடிவை எப்படி அறிந்து கொள்வது?

எதிர்மறையான முடிவை எப்படி அறிந்து கொள்வது?

கர்ப்பம் இல்லை என்றால் பரிசோதனை சாதனத்தில் ஒரே ஒரு கட்டுப்பாடு கோடு மட்டுமே தெரியும். வேறு எதுவும் இருக்காது. ஒரு வார இடைவெளியில் மீண்டும் மறுபரிசோதனை செய்து கொள்ளலாம்.

சில சமயங்களில் எதிர்மறையான முடிவு வெளிப்பட்ட பின்னரும் கர்ப்பமாக இருக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. இது தவறான எதிர்மறை முடிவாகும். இதற்கான காரணங்களை பார்ப்போம்.

எதிர்மறை முடிவுக்குக் காரணங்கள்

எதிர்மறை முடிவுக்குக் காரணங்கள்

. பரிசோதனை சாதனம் காலாவதி ஆகியிருக்கலாம்.

. விதமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்திருக்கலாம்.

. சிறுநீர் மாதிரி 30 நிமிடங்களுக்கு மேல் அதில் இருந்திருந்தால் எதிர்மறையான முடிவுகளை காட்டும்.

. போதுமான ஹெச்சிஜி உற்பத்தியாகும் முன்னரே நீங்கள் பரிசோதனை செய்திருக்கலாம்.

. பரிசோதனைக்கு முன்னர் அதிக நீராகாராம் எடுத்திருந்தால் அதிக சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் வெளியாகியிருக்காலம்.

. ஆண்டிஹிஸ்டமின்ஸ், டையூரெடிக்ஸ் போன்ற மருந்துகள் உட்கொண்டிருந்தால் தவறு நடக்கலாம்.

வலுவற்ற கோடு

வலுவற்ற கோடு

சமயங்களில் பரிசோதனையில் வலுவற்ற கோடு தெரியும். இது உங்களது சிறுநீர் மாதிரியில் ஹெச்சிஜி ஹார்மோன் அளவு குறைவாக இருப்பதால் இவ்வாறு காட்டும். முந்தைய கருத்தரிப்பின் போது ஹார்மோன் அளவு குறைந்திருந்ததன் காரணமாக இந்த வலுவற்ற கோடு தெரியும். கர்ப்பத்துக்கு போதுமான அதிகமான ஹார்மோன் செறிவு இருந்தால் கோடு அடர்த்தியாக இருக்கும்.

கர்ப்பத்தை உறுதிபடுத்த ரத்தப் பரிசோதனை

கர்ப்பத்தை உறுதிபடுத்த ரத்தப் பரிசோதனை

மருத்துவ மையம் அல்லது டாக்டர் கிளினிக்கில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனினும் சிறுநீர் பரிசோதனையை விட குறைவானவர்களே ரத்த பரிசோதனையை தேர்வு செய்வார்கள். ஆனால், இதில் நல்ல விஷயம் என்னவென்றால், சிறுநீர் பரிசோதனைக்கு முன்னதாகவே கர்ப்ப நிலையை முன்கூட்டியே அறி ந்துவிடலாம். கருத்தரிப்புக்கு பின்னர் 6 முதல் 8 நாட்களில் இதை கண்டுபிடித்துவிடலாம். எனினும் இது முடிவு தெரிய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

உங்களது டாக்டர் 2 விதமான பரிசோதனைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். ஹெச்சிஜி தர பரிசோதனை. இது ரத்த மாதிரியில் உள்ள ஹெச்சி.யை கண்டுபிடிக்கும். இதன் மூலம் கர்ப்ப நிலையை அறியலாம். மாதவிடாய் தவறிய 10 நாட்களுக்கு பின்னர் இந்த பரிசோதனையை டாக்டர் பரிந்துரை செய்யலாம். இதன் மூலம் ஹெச்சிஜி அளவை முன்கூட்டியே அறியமுடியும்.

அடுத்ததாக ஹெச்சிஜி எண்ணிக்கை அடிப்படையிலான பரிசோதனை செய்ய பரிந்துரை செய்வார். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சரியான ஹெச்சிஜி அளவை அறிய முடியும். அதேபோல் குறைந்த ஹார்மோன் அளவையும் கண்டறியலாம். கர்ப்பம் சார்ந்த சிக்கல்களையும் இதன் மூலம் அறிய வாய்ப்பு ஏற்படும். இடமாற்றம் அல்லது குழாய் கர்ப்பம் போன்வற்றின் சாத்திய கூறுகளை மறுக்கும் வகையிலான பரிசோதனைகளையும் இத்துடன் இணைத்து செய்ய பரிந்துரைக்கலாம். அதோடு ஹெச்சிஜி அளவு வீழ்ச்சி காரணமாக கருச்சிதைவு ஏற்பட்டால் உங்களது உடல் செயல்பாட்டை கண்காணிக்க கூடிய பரிசோதனையையும் மேற்கொள்ள செய்யலாம்.

வீட்டுப் பரிசோதனை முறை

வீட்டுப் பரிசோதனை முறை

சௌகர்யமானதாகும். தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்து முடிவை ஒரு சில நிமிடங்களில் அறிந்தகொள்ளலாம். சமயங்களில் இது தவறு ஏற்படலாம். அத்தகைய சமயங்களில் ரத்த பரிசோதனை உகந்தது. ஆனால் அது கடினமானது. டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி நேரில் செல்ல வேண்டும். ரத்த மாதிரியை கொடுத்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். அதனால் எது சிறந்தது? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இதன் பின்னர் தாங்கள் எந்த முறையில் பரிசோதனையை செய்து கர்ப்ப முடிவை அறிந்துகொண்டீர்கள் என்று எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களது கருத்தை கீழ்காணும் கருத்து பகுதியில் பதிவிடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Is The Best Time To Take A Pregnancy Test

When is the best time to take a pregnancy test, when does it become positive are important questions to ask when trying to conceive.
Story first published: Wednesday, April 25, 2018, 13:23 [IST]
Desktop Bottom Promotion