Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
கர்ப்பகாலத்தில் சீட் பெல்ட் அணிவது குழந்தையை பாதிக்குமா? பாதிக்காதா?
கர்ப்பகாலத்தில் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவது குழந்தையை பாதிக்குமா என்பது அனைத்து பெண்களுக்கும் மனதில் இருக்கும் ஒரு பொதுவான கேள்வி ஆகும். அதற்கான பதில் என்னவென்றால் சீட் பெல்ட் அணிவது குழந்தையை
கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் இப்பொழுது மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்குறீர்களோ அதே அளவு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் குழந்தையின் மீது பிரதிபலிக்கும். இந்த சூழ்நிலையில் பெண்கள் மனதில் முக்கியமாக எழும் கேள்விகளில் ஒன்று கர்ப்பகாலத்தில் பயணத்தின்போது சீட் பெல்ட் அணியலாமா என்பதுதான்?

இப்போதுள்ள காலகட்டத்தில் கார் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி கார் இல்லாதவர்கள் கூட குறைவான வாடகையில் கிடைக்கும் தனியார் கார்களை உபயோகிக்க தொடங்கி விட்டனர். சாதராண ஆட்கள் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவது குழந்தையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற பயம் உங்களுக்கு எழலாம். அந்த பயத்தை சமாளிப்பதற்கான தீர்வுதான் இது.

சீட் பெல்ட் அணியலாமா?
கர்ப்பிணி பெண்களாய் இருந்தாலும் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியவேண்டியது அவசியமாகும். உங்களை மட்டுமின்றி உங்களை குழந்தையையும் பாதுகாக்க வேண்டிய தருணம் இது. எனவே விபத்துகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்க சீட் பெல்ட் அணியுங்கள். கர்ப்பகாலத்தில் சீட் பெல்ட் அணிவது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம், குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் கூட இருக்கலாம். உண்மையாதெனில் சீட் பெல்ட்டை சரியாக போடும்போது அது வயிற்றின் மீது மிகக்குறைந்த அழுத்தத்தையே தரும்.

எவ்வாறு சீட் பெல்ட் அணிய வேண்டும்?
மற்ற நேரங்களை போல் அல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறிது எச்சரிக்கையாக சீட் பெல்ட்டை அணிய வேண்டும். அதுதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. சீட் பெல்ட்டை நன்கு இழுத்து அதிக அழுத்தம் இல்லாதபடி தளர்வாக போடவும். பெல்டை உங்கள் வயிற்றுக்கு கீழே இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். மேலும் பெல்ட்டின் பட்டையானது மார்புகளுக்கு இடையேயும், வயிற்றின் பக்கவாட்டிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். ஒருவேளை நீங்கள் ஏர் பேக்கை பயன்படுத்தினால் முடிந்தளவு சீட்டை பின்னால் நகர்த்தி கொள்ளுங்கள்.

ஏர் பேக்கின் அவசியம்
ஒருவேளை விபத்து நடந்தால் காரில் உள்ள ஏர் பேக் உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாக்கும். சில பெண்கள் ஏர் பேக் குழந்தையை பாதிக்கும் என நினைத்து ஏர் பேக் உபயோகிப்பதை தவிர்க்கிறார்கள், இது மிகவும் அபத்தமான ஒன்று. ஏர் பேக் உபயோகிப்பது உங்களையும், கருவில் இருக்கும் குழந்தையையும் எந்தவிதத்திலும் பாதிக்காது. சேதத்தை குறைக்க நன்றாக சீட்டிற்கு உட்புறம் அமர்வது நல்லது. ஒருவேளை நீங்கள் காரை ஒட்டாவிட்டால் காரின் பின்புறம் அமர்ந்து கொள்வது மேலும் சிறந்தது. ஒருவேளை விபத்தை சந்திக்க நேர்ந்தால் உங்களுக்கு அடிபடாவிட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக தரமான சீட் பெல்ட்களையே உபயோகிக்க வேண்டும்.

எவ்வாறு வசதியாக உணர்வது?
கர்ப்பகாலத்தில் நீண்ட நேரம் சீட் பெல்ட் அணிவது சிரமமாக இருக்கலாம். ஒவ்வொரு தொன்னூறு நிமிடங்களுக்கு சிறிது நேரம் காரை நிறுத்தி ஆசுவாசபடுத்திக் கொள்ளவும். இல்லையனில் தசைப்பிடிப்பு, கணுக்கால் வீக்கம் போன்றவை ஏற்படலாம். முதுகு வலியை தவிர்க்க பின்புறம் மென்மையான தலையணைகளை வைத்துக்கொள்ளலாம். இருவர் மட்டும் செல்லும் பயணமென்றால் காரின் பின்புறம் நன்கு வசதியாக அமர்ந்து கொள்ளலாம்.

எச்சரிக்கை
சிறிது தூர பயணமே என்றாலும் சீட் பெல்ட் அணிவதை தவிர்க்கக்கூடாது. உங்கள் குழந்தை எந்தவித பாதிப்புமின்றி உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால் எந்தவிதத்திலும் அலட்சியமாய் இருக்கக்கூடாது. சீட் பெல்ட் அணிவது பயணம் குறித்த பயத்தை உங்களுக்குள் குறைக்கும். ஒருவேளை சீட் பெல்ட் அணிவதால் உங்களுக்கு ஏதேனும் தீவிர அசௌகரியம் ஏற்பட்டால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.

எப்போதெல்லாம் அணியதேவையில்லை.?
காரை பின்னோக்கி ஓட்டும்போதும், கார் இயக்கத்தில் இல்லாமல் நிற்கும் போதும் சீட் பெல்ட் அணிய தேவையில்லை. ஒருவேளை உங்களது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உங்கள் மகப்பேறு மருத்துவர் சீட் பெல்ட் அணிய தேவையில்லை என்ற சான்றிதழ் கொடுத்திருந்தால் சீட் பெல்ட் அணிய வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காரின் முன்பும் உட்காராமல் பின்புறம் உட்கார்ந்து கொள்வது புத்திசாலித்தனமானது.

பாதிப்புகள்
கர்ப்பகால விபத்துகள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு நஞ்சுக்கொடி விலகல், அதாவது பிரசவத்திற்கு முன்னரே நஞ்சுக்கொடி கருப்பையை விட்டு விலகிவிடும், இதனால் குழந்தைக்கு கிடைக்கும் ஆக்சிஜன் தடைபடும். கருச்சிதைவு, இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு ஆகும். ஒருவேளை வயிற்றில் இருக்கும் குழந்தை 5 மாதங்களுக்கு குறைவான குழந்தை என்றால் குழந்தையை மட்டும் பாதிக்கும் அதுவே 5 மாதங்களுக்கு அதிகமான குழந்தை என்றால் அம்மாவையும் சேர்த்து பாதிக்கும். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு கொடுக்காமல் பயணத்தின்போது எச்சரிக்கையாய் இருங்கள். குறிப்பாக சீட் பெல்ட் அணிய மறந்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications