For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பகாலத்தின்போது மேக்கப் அணியலாமா?

கர்ப்பகாலத்தின் போது மேக்கப் அணிவது பாதுகாப்பானதா? இல்லையா? என்ற கேள்வி பல ஆண்டுகளாக அனைவரின் மனதிலும் உள்ளது. அதற்கான பதில் என்னவென்றால் ஆம். கர்ப்பகாலத்தில் மேக்கப் போடுவது கருவிலுள்ள குழந்தையை பாதி

|

நீங்கள் கர்ப்பமாய் உள்ளீர்களா? உங்களுக்கு மேக்கப் போடுவது மிகவும் பிடிக்குமா? இரண்டு கேள்விகளுக்குமே பதில் ஆம் எனில் உங்கள் மனதில் இருக்கும் ஒரு கேள்வி நீங்கள் போடும் மேக்கப் கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா என்பதுதான். நீங்கள் பணிக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் சிறிதளவு மேக்கப் போடுவது தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சில பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து மேக்கப் போடுவது கட்டாயமானதாக கூட இருக்கலாம். இப்படி கர்ப்பகாலத்தில் அதிக மேக்கப்போடும் அனைவருக்கும் நாங்கள் கூறப்போகும் பதில் என்னவென்றால் உங்கள் மனதில் இருந்த கேள்வி சரிதான் நீங்கள் போடும் அதிகளவு மேக்கப் உங்கள் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்பதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும மாற்றம்

சரும மாற்றம்

கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் உங்கள் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உடலில் தடிப்புகள், சில தனித்துவமான அலர்ஜிகள், தோல் சம்பந்தமான தொற்றுகள் போன்றவை ஏற்படும். எனவே இதுபோன்ற சரும மாற்றங்களை சரி செய்ய பெண்கள் சில முக மாஸ்க்களை பயன்படுத்துவரகள் அதேபோல சில பெண்கள் அழகு சாதனங்களையும் பயன்படுத்துவார்கள்.

கர்ப்பகாலமும், மேக்கப்பும்

கர்ப்பகாலமும், மேக்கப்பும்

கர்ப்பகாலத்தில் அழகுசாதனங்களை பயன்படுத்துவது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா என்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சரியான முடிவு தெரியாமல் இருப்பதுதான் கவலைகொள்ள வேண்டிய செய்தி. இருப்பினும் இதை பற்றி பல்வேறு வல்லுநர்கள் அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

கருத்து 1

கருத்து 1

ஹைடிரோகுயினோன் என்பது முகத்தை பொலிவடைய பயன்படுத்தபடும் ஒரு இரசாயனம் ஆகும். இது இரத்தத்தால் குறைந்தளவே உறிஞ்சப்படுவதால் இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.

கருத்து 2

கருத்து 2

ட்ரெடினாய்னின் உறிஞ்சும் அளவு குறைவாய் இருந்தாலும் அதன் இது கருவில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது.பெத்தலேட்ஸ் எனப்படும் இரசாயனம் உங்கள் தினசரி உபயோகிக்கும் லிப்ஸ்டிக், ஹேர் ஸ்ப்ரே, நெய்ல் பாலிஷ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாதிப்பு உங்கள் குழந்தையின் புத்திகூர்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக பெத்தலேட்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கருத்து 3

கருத்து 3

முகப்பருவிற்காக பயன்படுத்தப்படும் கிளிண்டமைசின் மற்றும் எரித்ரோமைசின் கருவில் வளரும் குழந்தை மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. முகப்பருக்கான அழகுசாதனத்தில் பயன்படும் சாலிசிலிக் அமிலத்தை சருமம் குறைந்தளவே உறிஞ்சும், அதேபோல மற்றோரு இரசாயனமான டிஹைட்ராக்ஸிட்டோன் பதனிடுதலில் பயன்படுத்தபடும் இரசாயனம் ஆகும். இந்த இரண்டு இரசாயனமும் குழந்தையின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சோடியம், கால்சியம் நிறைந்த அழகுசாதனங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்காத வகையில் அழகுசாதனங்களை உபயோகப்படுத்தி பெண்கள் அழகாக காட்சியளிக்க இயலும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள் மேக்கப் போடலாமா என்பது இன்னும் தெளிவாக பதில் கூற முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில் கடைகளில் விற்கப்படும் அழகுசாதனைகளுக்கு என எந்தவித தணிக்கையும் இல்லை. எனவே அதிலுள்ள இரசாயனங்களின் அளவீடு பற்றி தெரிந்துகொள்ள நமக்கு வாய்ப்புகள் மிகக்குறைவு. எனவே அழகுசாதன பொருட்களை உபயோகிக்கும் முன் அதிலுள்ள இரசாயனங்களையும், அதன் பாதிப்புகளையும் ஆய்வு செய்துவிட்டு உபயோகிப்பது நல்லது.

பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

கர்ப்பகாலத்தில் சரியான அளவு வைட்டமின் ஏ எடுத்துக்கொள்ளுவது உங்கள் சருமத்தில் அற்புதங்களை ஏற்படுத்தும். ரெட்டினாய்டு நிறைந்த மாத்திரைகள் மற்றும் கிரீம்கள், சரும அலர்ஜிகள், தடிப்புகள், முகப்பரு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். ரெட்டினாய்டு என்பது வைட்டமின் ஏ வின் செயற்கை வடிவம். ஆனால் அதிகளவு வைட்டமின் ஏ கருவளர்ச்சியை பாதிக்கும்.

வைட்டமின் கே

வைட்டமின் கே

சருமத்திற்கான கிரீம்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு வேதிப்பொருள் வைட்டமின் கே ஆகும். மேலும் இது தடிப்புகளை சரிசெய்ய கூடியது. ஆனால் இது சருமத்தில் ஊடுருவி இரத்தத்தில் அதிகளவு கலப்பதால் கருவில் வளரும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வைட்டமின் கே உள்ள அழகுசாதன பொருட்களை பய்னபடுத்தாமல் இருப்பது நல்லது.

சென்டெல்லா அசிட்டிக்கா

சென்டெல்லா அசிட்டிக்கா

இது கர்ப்பகால தழும்புகளை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும். ஆனால் இது சருமத்தின் உணர்திறனை பாதித்து சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது அரிப்பை ஏற்படுத்தும். இதனை வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் போது போதை மருந்து போல செயல்படும். இதனால் கருச்சிதைவு கூட ஏற்படலாம்.

பாதுகாப்பு வழிமுறைகள்

பாதுகாப்பு வழிமுறைகள்

வழி 1

முதல் மூன்று மாதங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாதரசம், லெட் போன்ற வேதிப்பொருட்களை உபயோகப்படுத்துவதை நிறுத்தவேண்டும். இவை கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கருச்சிதைவை கூட ஏற்படுத்தலாம்.

வழி 2

நெய்ல் பாலிஷ், ஹேர் டை போன்றவற்றில் அதிகளவு வேதிப்பொருட்கள் உள்ளன. அதிலும் நீல் பாலிஷ் அணிந்து நீங்கள் சாப்பிடும்போது அந்த இராசயனங்கள் வாய்வழியாக உடலுக்கு உள்ளேயும் செல்லக்கூடிய அபாயம் உள்ளது. எனவே கர்ப்பகாலம் முடியும்வரை இவற்றை தவிர்ப்பது நல்லது.

வழி 3

அழகாக காட்சியளிக்க நீங்கள் உபயோகிக்கும் செயற்கை அழகுசாதனங்கள் உங்களை தற்காலிகமாக அழகாக காட்டலாமே தவிர எதிர்காலத்தில் நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். இயற்கை நமக்கு ஏராளமான அற்புதங்களை அளித்துள்ளது, அதில் அழகுக்கான பொருட்கள் ஏராளமாய் உள்ளது. இவை எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை, எனவே இயற்கை முறையில் உங்கள் அழகை பாதுகாப்பதே சிறந்த வழி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is wear makeup during pregnancy harmful for baby?

Every woman has this doubt in their mind that wear makeup during pregnancy will affect the baby or not?. Unfortunately the answer for this question is YES. Every woman has this doubt in their mind that wear makeup during pregnancy will affect the baby or not?. Unfortunately the answer for this question is YES. Try to avoid harmful chemicals like Mercury, Vitamin A, Vitamin K.
Desktop Bottom Promotion