For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய கிரகணம் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமா?

இன்றைய கிரகணம் இரவு 11 மணிக்கு மேல் தொடங்கி, அதிகாலை 4 மணியளவில் முற்றிலுமாக முடிவடைய இருக்கிறது. சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாயினும் அந்நாட்களில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப

|

உலகம் முழுவதும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சந்திர கிரகணம் இன்று நடக்கவிருக்கிறது. இந்த கிரகணம் இரவு 11 மணிக்கு மேல் தொடங்கி, அதிகாலை 4 மணியளவில் முற்றிலுமாக முடிவடைய இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது வேறுசில உலக நாடுகளிலும் இம்மாதிரியான கிரகணங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு சில பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆழமாக நம்புகின்றனர்.

Lunar Eclipse Harmful to Pregnant Women: Myth or Truth in tamil

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாயினும் அந்நாட்களில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது; அதிலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் இன்றைக்கு ஏற்படப்போகும் சந்திர கிரகணம் கர்ப்பிணி பெண்களில் ஏற்படுத்தப்போகும் நன்மை தீமைகளை குறித்து படித்தறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெட் மூன் கிரகணம் - Red Moon Lunar Eclipse

ரெட் மூன் கிரகணம் - Red Moon Lunar Eclipse

இன்றைய சந்திர கிரகணம் ரெட் மூன் கிரகணம் என்று அழைக்கப்படுகிறது; இது 36 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த கிரகணம் இன்று இரவு 11:54 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 3:49 மணியளவில் முடிவடையப்போகிறது. இந்த கிரகண நேரங்கள் அல்லது நாட்கள் அபசகுனம் அல்லது கெடுதல் விளைவிக்கும் நாட்களாக மக்களால் நம்பப்படுகிறது. கிரகணத்தின் போது வெளியில் வருத்தலோ, உண்ணுதலோ கூடாது என்ற கருத்துக்கள் நிலவுகின்றன; முடிந்தால் சமைப்பதையும் இந்த நேரத்தில் தவிர்த்தல் நல்லது.

கர்ப்பிணி பெண்கள்!

கர்ப்பிணி பெண்கள்!

இந்த கிரகண நாட்களில் செய்யக்கூடிவை மற்றும் கூடாதவை அனைத்து மக்களுக்கும் பொருந்தினாலும், கர்ப்பிணி பெண்கள் மீதான கிரகண செயல்பாடுகள் மிக அதிகமாக திணிக்கப்படுகின்றன. இதற்கு அவர்களுள் வளரும் கருவின் உயிர் மற்றும் அதன் வளர்ச்சி முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது; இருப்பினும் ஏன் கிரகண செயல்பாடுகளின் தாக்கம் கர்ப்பிணிகள் மீது அதிகம் ஏற்படும் என்று கூறப்படுவதின் உண்மை நிலை என்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளை படித்தறிந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

போகக்கூடாது - பார்க்கக்கூடாது

போகக்கூடாது - பார்க்கக்கூடாது

கிரகண நாட்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்லக்கூடாது; அதிலும் குறிப்பாக கிரகண நேரத்தில் வெளியில் செல்வது என்பது கூடவே கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் வானில் நடைபெறும் கிரகண நிகழ்வுகளை கர்ப்பிணிகள் தங்களின் வெற்றுக் கண்களால் பார்த்தல் ஆகாது என்றும் நம்பப்படுகிறது. இந்த கூற்றுகளை மீறி கர்ப்பிணிகள் வெளியில் சென்றாலோ அல்லது கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்த்தாலோ அது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் அல்லது கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி பாதிப்படைந்து ஊனமாக பிறக்கலாம், இல்லையேல் கருக்கலைப்பு கூட நிகழலாம்.

கையிலெடுக்க வேண்டாம்.!

கையிலெடுக்க வேண்டாம்.!

கர்ப்பிணி பெண்கள் கத்தி அல்லது எந்தவொரு கூரிய பொருள்களையும் கையில் எடுக்க கூடாது; அவற்றை பயன்படுத்துதலை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இந்த கூரிய பொருட்களை உபயோகிக்கும் பொழுது கர்ப்பிணியின் உடலில் காயங்கள் நேர்ந்தால், பிறக்கப்போகும் குழந்தையின் உடலில் பிறப்பு அடையாளங்கள் அல்லது வெட்டுக்குறிகள் போன்றவை ஏற்படலாம்; குழந்தை இந்த தழும்பு, குறிகள், மச்சங்களுடன் பிறக்கும் வாய்ப்புண்டு.

செய்ய வேண்டாம்!

செய்ய வேண்டாம்!

கிரகண நேரத்தில், கர்ப்பிணிகள் சமைத்தல் கூடாது; இந்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது, தண்ணீர் கூட பருகாமல் இருந்தால் மிகவும் நல்லது. கிரகணம் முடிந்த பின் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது கர்ப்பிணிகள் அல்லாமல் அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒன்று.

குளிப்பதையும் கூட கிரகணத்திற்கு பின் செய்வது நல்லது. எந்தவொரு அலுவலக அல்லது முக்கிய வேலைகளை இந்த நேரத்தில் செய்யாமல் தவிர்க்க முயலுங்கள். இந்த கருத்துக்களை கர்ப்பிணிகள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்லது.

செய்ய வேண்டியவை!

செய்ய வேண்டியவை!

இன்றைய கிரகணம் இரவில் நடப்பது மிக நல்ல விஷயம்; இரவு நேரத்தில், கர்ப்பிணிகள் வெளியில் எங்கும் செல்லாமல், படுத்து நிம்மதியாக, அமைதியாக உறங்குங்கள்! பொதுவாக சாப்பிடுவதற்கான அவசியமும் நள்ளிரவில் ஏற்படாது; கிரகண நேரத்திற்கு முன்னதாவே, உண்டு சீக்கிரமாக உறங்கி விடுங்கள் தோழியரே!

மேலும் வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் கிரகண நேரத்தில் மூடி வைத்திருங்கள்; நல்ல அடர்த்தியான திரைசீலைகளை ஜன்னல் மற்றும் கதவுகளில் பயன்படுத்தி, கிரகண கதிர்கள் உங்களை அடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்காக இல்லாவிடினும் உங்களுக்குள் வளரும் கருவிற்காக, அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக செய்யுங்கள்!

அறிவியல் காரணங்கள்!

அறிவியல் காரணங்கள்!

கிரகணத்தின் போது செய்யக்கூடாது என்று தடுத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் சில அறிவியல் காரணங்கள் உள்ளன; அவையாவன:

  1. வெளியில் செல்வதால், கிரகண கதிர்கள் உடலின் செயல்பாடுகளை தாக்கும் எனவே வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
  2. வெற்றுக்கண்களால் கிரகணத்தை பார்த்தால், கண்கள் பாதிப்படைந்து, கண்பார்வை குறையும்; எனவே வெற்றுக் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
  3. கிரகண நேரத்தில் உண்டால், அது உடலில் குளுக்கோஸ் அளவையும், நீர்ச்சத்தையும் குறைக்கும்; எனவே இந்த நேரத்தில் உண்ணாமல் இருப்பது நல்லது.

என்னதான் அறிவியல் காரணங்கள் கூறப்பட்டாலும், அது முற்றிலும் உண்மையாக அல்லது முற்றிலும் பொய்யாக இருப்பதில்லை; நம்மால் செய்யக்கூடிய காரியமாக இருந்தால், அவற்றை முன்னோர் அறிவுரைப்படி பின்பற்றுதல் நல்லது. அதிலும் கர்ப்பிணி பெண்களை பொறுத்தவரை இது இரு உயிர்களின் ஆரோக்கிய மற்றும் வளர்ச்சி குறித்த விஷயம்; எனவே, பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நல்லது கர்ப்பிணிகளே!

படித்த நல்ல செய்தி நாலு பேரை எட்ட, மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பதிப்பை பரவி, படித்ததை பகிர்ந்து உதவுவீராக!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lunar Eclipse - red moon eclipse harmful during pregnancy - myths vs facts in tamil

Lunar Eclipse - red moon eclipse harmful during pregnancy - myths vs facts in tamil
Desktop Bottom Promotion