பிரசவ காலத்தில் பெண்கள் சுய இன்பம் காண வேண்டியது ஆபத்தா? அவசியமா?

Written By:
Subscribe to Boldsky

கர்ப்பகாலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா என்ற கேள்வியை நிறைய தம்பதிகள் கேட்கின்றனர், ஆனால் மருத்துவர்கள் முதல் மூன்று மாதம் நிச்சயமாக உடலுறவு சார்ந்த எதையுமே தம்பதிகள் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். ஏனெனில் இந்த முதல் மூன்று மாதத்தில் கரு கலைந்து போக நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சுய இன்பம் செய்யலாமா என்ற சந்தேகம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரிந்து கொள்ளுங்கள்!

புரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் நிச்சயமாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பம் உடலுறவை முற்றிலும் நிறுத்தும் ஒன்றாக இல்லை. ஆனால் இந்த கருத்து ஒவ்வொருக்கும் மாறுபடும். ஒரு சில பெண்கள் உடலுறவின் போது மிகவும் பாதிப்படைகின்றனர். அது அவர்களுக்கு வலியை தருகிறது. இதனால் உடலுறவு வேண்டாம் என நினைக்கிறார்கள். சுய இன்பம் என்பது இவர்களை காப்பாற்றும் ஒன்றாக இருக்கிறது.

 மார்பக தூண்டுதல்

மார்பக தூண்டுதல்

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளில் தூண்டுதல், மார்பகங்களை மசாஜ் செய்தல் ஆகியவை ஆக்ஸிடோசின் மற்றும் ரோஸ்டாலாண்டினின் என்ற ஹார்மோன்களை தூண்டிவிட்டு, கர்ப்ப காலம் முடிவடையும் முன்னரே பிரசவம் உண்டாக வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இதுவும் நடக்குமா?

இதுவும் நடக்குமா?

சில சமயங்களில் சுய இன்பத்தின் போது பிறப்பு உறுப்புகளின் தூண்டுதல்களாலும் கூட, இவ்வாறு முன்கூட்டியே பிரசவம் நிகழ்ந்து விடுமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

நிரூபிக்கப்படவில்லை!

நிரூபிக்கப்படவில்லை!

ஆனால் பிரசவ காலத்தில் சுய இன்பம் செய்வதால், கர்ப்ப காலம் முழுமையடையும் முன்னரே குழந்தை பிறந்துவிடும் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை.

ஆபத்து இல்லாத பிரசவம்!

ஆபத்து இல்லாத பிரசவம்!

உங்களது பிரசவமானது, ஆபத்துக்கள் இல்லாத பிரசவமாக இல்லை என்றால், நீங்கள் சுய இன்பம் காண்பதினால் உங்களது பிரசவம் ஆபத்தில் முடியாது.

இந்த பிரச்சனை இருக்கிறதா?

இந்த பிரச்சனை இருக்கிறதா?

ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை, அதிக மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளை கொண்ட சற்று கவனம் செலுத்த வேண்டிய பிரவசமாக இருந்தால், சுயஇன்பம் காண்பது பற்றி கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். சுய இன்ப தூண்டுதல்கள் ஒருவேளை உங்களுக்கு ஆபத்தை தரக்கூடியதாக இருக்கலாம்.

மருத்துவரிடம் இது பற்றி பேச கூச்சப்பட வேண்டாம். தவறு நடக்கும் முன்னரே அதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வது தான் அறிவுடைமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is masturbation during pregnancy right

Is masturbation during pregnancy right
Story first published: Friday, August 18, 2017, 12:54 [IST]
Subscribe Newsletter