For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

By Lakshmi
|

கர்ப்ப காலத்தில் நீங்கள் முன்பை விட அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் அப்படி சாப்பிட்டால் தான் உங்களது கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் அப்போது தான் மேம்படும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது.

குழந்தை

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும் உணவுகளில் தான் அவர்களது குழந்தைகளின் ஆரோக்கியமே அடங்கியுள்ளது. எனவே நீங்கள் ஒரு சில உணவுகளை முக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியமாகும். மேலும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் அறிகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை போக்கவும் இந்த உணவுகள் உங்களுக்கு உதவும். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்சியம், இரும்புச்சத்து

கால்சியம், இரும்புச்சத்து

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

முட்டை

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

மீன்

மீன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

பால்

பால்

கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.

மயக்கம் வராமல் இருக்க

மயக்கம் வராமல் இருக்க

ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு அதிகமாக இருக்கும் தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.

புரோகோலி

புரோகோலி

புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம் பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும்.

 தண்ணீர்

தண்ணீர்

கர்ப்பகாலத்தின் போது தண்ணீர் அதிகம் பருகவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் சேய் நல்ல முறையில் வளர்ச்சி பெறும்.

எண்ணெய் உணவுகள்?

எண்ணெய் உணவுகள்?

எண்ணெயைப் பொறுத்த வரை, தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து டிபனாக சாப்பிடலாம்.

சர்க்கரை நோய்?

சர்க்கரை நோய்?

சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஜெஸ்டேஷனல் டயபடிஸ் பிரச்சினை ஏற்படலாம். எனவே, அந்தப் பெண்கள் பால், காபி வகைகளில் சர்க்கரையை தவிர்த்து, இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்க்கவும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இந்த உடற்பயிற்சிகள் உங்களது கர்ப்ப காலத்தை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளும். மேலும் பிரசவம் சுலபமாக நடக்கவும் இது உதவியாக இருக்கும். எனவே மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை அலட்சியம் செய்யாமல் செய்ய வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக சிலரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அவர்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாம். மற்றவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods you should eat during first trimaster

Foods you should eat during first trimaster
Desktop Bottom Promotion