For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரமமே இல்லாத பிரசவத்திற்கு பழங்கால இந்தியர்கள் கையாண்ட இரகசிய சூட்சமங்கள்!

சிரமமே இல்லாத பிரசவத்திற்கு பழங்கால இந்தியர்கள் கையாண்ட இரகசிய சூட்சமங்கள்!

By Lakshmi
|

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரமாகும். தாய்மை தான் ஒரு பெண்ணுக்கு முழுமையை கொடுக்கிறது.. ஒரு பெண் பிரசவித்து இருக்கும் காலத்தில் அவளை அனைவரும் மிக மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள்.. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணானவள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக மாற்றங்களை சந்திக்கிறாள்...!

மேலும், இந்த கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுக்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு கருவை மிக மிக பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. உங்களது ஒரு சின்ன சோகம் கூட உங்களது கருவை தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே எப்போதும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்...!

நமது முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் உண்டாகும் சில தொந்தரவுகளை மிக எளிமையாக கையாள சில சூட்சமங்களை கடைப்பிடித்தார்கள். அந்த சூட்சமங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முதுகு வலிக்கு...

1. முதுகு வலிக்கு...

உங்களது முதுகின் அக்குபஞ்சர் பகுதியில் இந்த முதுகு வலி வராமல் இருக்க மசாஜ் செய்ய வேண்டும். அதாவது முதுகின் அக்குபஞ்சர் பாய்ண்ட் என்பது உங்களது மணிக்கட்டு பகுதி ஆகும்.

உங்களது இரண்டு கைகளின் மணிக்கட்டுகளையும் கீழ் நோக்கி மடக்கவும். நீங்கள் இஞ்சி கலந்த சூடான நீரில் குளியல் எடுக்கலாம்.

2. இரத்த அழுத்தம்

2. இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த பிரச்சனைகள் வராமல் இருக்க உங்களது கட்டைவிரலின் அடிப்பகுதியில் மிருதுவாக தினமும் மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். இதே போல கால் கட்டைவிரல் பகுதியிலும் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்த பிரச்சனை வராது.

3. சர்க்கரை நோய்

3. சர்க்கரை நோய்

கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோயானது பல் பெண்களை அச்சுறுத்தும். இதற்கு உங்களது கால் முட்டிக்கு பின்புறத்தில் இருக்கும் சதைப்பகுதிகளை நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். இது உங்களது செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும். நீங்கள் கொத்தமல்லி ஜீஸையும் கொஞ்சம் குடிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

4. தலை சுற்றல்

4. தலை சுற்றல்

உங்களது பெருவிரலுக்கும் அதன் அருகில் இருக்கும் விரலுக்கும் இடையில் உள்ள சதைப்பகுதியை சில நொடிகள் தினமும் மூன்று முறை மசாஜ் செய்யுங்கள். இந்த பயிற்சியானது உங்களுக்கு மயக்கம் வருவது போல இருக்கும் உணர்வில் இருந்து விடுவிக்கும்.

நீங்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை மற்றும் இஞ்சி டீயை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் பருகுங்கள். இதுவும் மயக்க உணர்வில் இருந்து விடுதலை தரும்.

5. முடி உதிர்வு பிரச்சனை

5. முடி உதிர்வு பிரச்சனை

முடி உதிர்வு பிரச்சனை என்பது கர்ப்ப காலத்தில் இருப்பது சாதாரணமானது தான். அதற்கு உங்களது இரண்டு கைகளையும் எதிர் எதிராக வைத்து கை விரல்களை ஒன்றோடு ஒன்று உரசுங்கள். இது போன்று சிறிது சிறிது நேரம் ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள். இதனால் முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எனவே உங்களது கூந்தலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

6. காலை நேர காய்ச்சல்

6. காலை நேர காய்ச்சல்

வெளிப்புற கணுக்கால் மற்றும் வெளி முழங்கால்களுக்கு இடையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு நாளில் மூன்று முறை மசாஜ் செய்யுங்கள். இது உங்கள் காலையில் வரும் காய்ச்சல் உணர்வுக்கு தீர்வளிக்கும்.

7. சருமம்

7. சருமம்

சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க மூன்று டம்ளர் பச்சை காய்கறிகளின் ஜூஸை பருகுங்கள். மேலும் கேரட் ஜூஸையும் நீங்கள் பருகலாம். இது உங்களது கல்லீரல், சிறுநீரகம் போன்ற பகுதிகளை சுத்தம் செய்வதன் மூலமாக உங்களது சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.

8. பிஸ்கட் சாப்பிடலாம்

8. பிஸ்கட் சாப்பிடலாம்

காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

9. வாசனை மற்றும் உணவுகள்

9. வாசனை மற்றும் உணவுகள்

குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.

10. சூடான உணவுகள்

10. சூடான உணவுகள்

கர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.

11. உடைகள்

11. உடைகள்

தளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.

12. இந்த நினைப்பு வேண்டாம்

12. இந்த நினைப்பு வேண்டாம்

குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.

13. அதிகமான வாந்தியா?

13. அதிகமான வாந்தியா?

அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

14. சிறுநீர் பரிசோதனை

14. சிறுநீர் பரிசோதனை

கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.

15. உதவி கேட்க தயக்கம் வேண்டாம்

15. உதவி கேட்க தயக்கம் வேண்டாம்

கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பேறு ஆகிய இரண்டும் மிக கடுமையான வேலைகள் ஆகும். இது உங்களை மன அழுத்தத்தில் தள்ளும். எனவே நீங்கள் எந்த நேரத்திலும், உங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடமோ அல்லது மருத்துவரிடமோ உதவி கேட்க தயக்கம் காட்ட வேண்டாம். இந்த சின்ன சின்ன முறைகளை செய்து உங்களது கர்ப்ப காலத்தையும், குழந்தை பிறப்பையும் இனிமையான நேரங்களாக மாற்றுங்கள்...! உங்களது பிரசவம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ancient Tricks to Have a Stress Free Pregnancy

Ancient Tricks to Have a Stress Free Pregnancy
Desktop Bottom Promotion