For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவறைக்குள் சிசு என்னென்ன லூட்டிகள் செய்யும் என தெரியுமா?

|

குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா?

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய உதவும் சில பழங்கால இயற்கை வழிகள்!

நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுகை

அழுகை

கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது. வியக்க வைக்கும் வகையில். சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.

பிணைப்பு

பிணைப்பு

இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது. மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை ஆக்டிவாக கேட்டுக் கொண்டிருப்பார்களாம்.

விக்கல்

விக்கல்

முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் உணர முடியாது. நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால் சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

புன்னகை

புன்னகை

26வது வாரத்தில் இருந்து குழந்தை ரியாக்ட் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.

 கொட்டாவி

கொட்டாவி

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே செம அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும் கொட்டாவி விடுமாம்.

சிறுநீர்

சிறுநீர்

முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும். கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

 கண்கள் திறப்பது

கண்கள் திறப்பது

28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும். கர்ப்பிணி பெண்களின் வயிர் மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான் கண்களை திறந்திருக்குமாம் சிசு.

ருசி

ருசி

கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு ருசியை அறியுமாம். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,"15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது. இதனால் நிறைய இனிப்பு ஃப்ளுயிட்களை விழுங்குகிறது" என கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Does The Baby Do Inside The Womb?

What Does The Baby Do Inside The Womb? read here in tamil.
Desktop Bottom Promotion