For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவுற்ற பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பகம் சார்ந்த பிரச்சனைகள்!!!

|

பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக கவனிக்கும் வகையில் இருப்பது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.

கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பகங்கள் பெரியதாக காணப்படும்

மார்பகங்கள் பெரியதாக காணப்படும்

நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம்.

 மக்களே உணர்ந்துவிடுவார்கள்

மக்களே உணர்ந்துவிடுவார்கள்

இவ்வாறு மார்பகங்கள் திடீரென பெரியதாவதை கண்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் எளிதாக பெண்கள் கருவுற்றுவிட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்வார்கள்.

புதிய உள்ளாடைகள் வாங்க வேண்டி வரும்

புதிய உள்ளாடைகள் வாங்க வேண்டி வரும்

மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.

மார்பக முலைகளும் வளரும்

மார்பக முலைகளும் வளரும்

மார்பகங்கள் மட்டுமின்றி, மார்பக முலைகளும் கூட பிரசவ காலத்தில் பெரியதாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நமைச்சல், கூச்சம்

நமைச்சல், கூச்சம்

கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

நீலநிற நரம்புகள் தென்படும்

நீலநிற நரம்புகள் தென்படும்

கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்பிகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.

பால் வடிதல்

பால் வடிதல்

மூன்றாவது மூன்றுகால சுழற்சியில் சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் பால் வடிதல் ஏற்படும். இதுவும் சாதாரணம் தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொட வேண்டாம் என்ற எண்ணம்

தொட வேண்டாம் என்ற எண்ணம்

கர்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேளைகளில், தனது துணை மார்பகங்களை தொடுவதை விரும்ப மாட்டார்கள். அசௌகரியமாக உணர்வார்கள்.

இறுக்கமான உள்ளாடை அணிய வேண்டாம்

இறுக்கமான உள்ளாடை அணிய வேண்டாம்

மார்பகங்கள் பெரிதானால், அதற்கேற்ற உள்ளாடை மாற்றி அணியுங்கள். இல்லையேல் மூச்சுவிட சிரமமாகவும், பால் சுரப்பதை தடுக்கும் வகையிலும் அமைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

NIne Breast Problems Only Pregnant Women Can Understand

Nine Breast Problems Only Pregnant Women Can Understand, Take a look.
Desktop Bottom Promotion