Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள்!!!
இதுவரை சருமத்தை அழகாக பராமரித்து வந்த பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போது வருத்தப்படும் ஒன்று தான் வயிறு பெரிதாகும் போது ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவது. பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் தான் மிகவும் சந்தோஷமான ஒன்று. மேலும் எவ்வளவு தான் குழந்தையின் வளர்ச்சியை நினைக்கும் போது சந்தோஷம் இருந்தாலும், வயிற்றில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் பார்க்கும் போது சிறிது வருத்தமும் ஏற்படும்.
ஆனால் இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் இருக்க, ஒருசில செயல்களை பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தண்ணீர் அதிகம் குடித்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுப்போன்று நிறைய உள்ளன. இங்கு அவற்றில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குள் வராமல் தடுக்கலாம்.

தண்ணீர்
பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம். ஏனெனில் சருமத்தில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும் போது, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான அளவு தண்ணீரை குடித்து வாருங்கள்.

அரிக்க வேண்டாம்
சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படும் போது, அரிப்புகள் ஏற்படும். அப்படி அரிப்புகள் ஏற்படும் போது, மறந்தும் சொறிய வேண்டாம். இதனால் கீறல்கள் ஏற்பட்டு தழும்புகள் ஏற்படுவதுடன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் ஏற்படும்.

ஆலிவ் ஆயில்
கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுக்க தினமும் வயிற்றில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் ஆலிவ் ஆயில் மசாஜ் ஸ்ட்ரெட்ச் மார்க்கை தடுக்க ஒரு சிறந்த வழியாகும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சியை கர்ப்பிணிகள் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமத்தின் மீள்தன்மை அதிகரிக்கும். எனவே தினமும் லேசான உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.

வைட்டமின் ஈ உணவுகள்
ஆலிவ் ஆயில் போன்றே, வைட்டமின் ஈ சத்தும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கும். இத்தகைய வைட்டமின் ஈ ஷியா வெண்ணெயில் அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தாலும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவது தடுக்கப்படும்.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலமும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை தடுக்கலாம்.

கற்றாழை
கற்றாழையின் ஜெல்லின் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளது. ஆகவே இந்த கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க் வருவது போன்று உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

எடையை பராமரிக்கவும்
குறிப்பாக கர்ப்பிணிகள் தங்களது உடல் எடையை பராமரிக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தால், பிரசவம் கஷ்டமாக இருப்பதுடன், அதுவே அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
