For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்!

By Maha
|

இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருப்பதாகும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்பத்திலும் மற்றும் மூன்றாம் மூன்றுமாத காலத்தின் ஆரம்பத்திலும் இரத்த பரிசோதனையை எடுப்பார்கள். ஏனெனில் கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பிரசவத்தின் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு 11.00 g/dl-க்கு குறைவாக இருந்தால், இரத்த சோகை இருப்பதாக அர்த்தம். இப்படி மிகவும் குறைவாக இருந்தால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரிய பிரச்சனை ஏற்படக்கூடும்.

இதுப்போன்று வேறு சில: கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயு தொல்லையை சமாளிக்க சில எளிய வழிகள்!!!

அதுமட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும் போது இரத்த சோகை இருப்பதைக் கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் இரத்த சோகை இருந்தால் ஏற்படும் அறிகுறிகள் அனைத்தும், கர்ப்பிணிகள் சாதாரணமாக சந்திக்கும் அறிகுறிகளாகத் தான் இருக்கும். உதாரணமாக, சோர்வு, மயக்கம், குமட்டல், தலை வலி, படபடப்பு போன்றவை. இவை அனைத்துமே கர்ப்பிணிகளுக்கு சாதாரணமாக ஏற்படுபவைகள். ஆனால் இவையே இரத்த சோகை இருந்தால் ஏற்படும் அறிகுறிகளும் கூட்.

ஆகவே கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதனால் இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம். சரி, இப்போது இரத்த சோகை ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்புக்களில் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருப்பதோடு, கர்ப்பிணிகளுக்கு தேவையான வைட்டமின் பி12 சத்துக்களும் அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிக்கன் ஈரல்

சிக்கன் ஈரல்

சிக்கன் ஈரலில் கூட இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதற்காக இதனை கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. அளவாக அவ்வப்போது சாப்பிட்டால், இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும்.

கருப்பு அரிசி

கருப்பு அரிசி

கருப்பு அரிசியானது சீனாவில் அதிகம் சாப்பிடப்படும் ஒரு உணவுப்பொருள். இந்த கருப்பு அரிசியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அமினோ ஆசிட், இரும்புச்சத்து, ஜிங்க், கரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸிலும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் வளமாக உள்ளது. எனவே கர்ப்பிணிகள் இந்த காய்கறியை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

கீரைகள்

கீரைகள்

அனைவருக்குமே கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய கீரையை கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்து வர, இரத்த சோகை ஏற்படுவது குறையும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் கர்ப்பிணிகளுக்கு சிறப்பான ஒரு உணவுப்பொருள் என்று சொல்லலாம். ஏனென்றால் அத்திப்பழத்தில் இரும்புச்சத்து, போலிக் ஆசிட் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதிலும் பாதாமை கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால், அது இன்னும் ஆரோக்கியமானது.

முட்டை

முட்டை

முட்டையின் நன்மைகளை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் பலருக்கு முட்டையில் இரும்புச்சத்தும் உள்ளது என்று தெரியாது. எனவே இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால், கர்ப்பிணிகள் முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anemia During Pregnancy

Anemia is common during pregnancy, but it can lead to serious problems for your unborn child. There are many foods to prevent anemia during pregnancy. Here is a list of foods that are high in iron.
Story first published: Friday, January 31, 2014, 15:47 [IST]
Desktop Bottom Promotion