Latest Updates
-
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சேர்க்க வேண்டிய 7 அதிமுக்கிய பொருட்கள்!!!
ஒரு பெண் முழுமை அடைவதே தாயான பின்பு தான் என்றொரு கூற்று உண்டு. தன் வாரிசை தவம் போல் சுமந்து பெற்றுக் கொள்ளும் பெண், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவே விரும்புவாள். ஆனால் விரும்பினால் மட்டும் போதுமா? அதற்கான ஆயத்தங்களையும் மேற்கொள்ள வேண்டாமா?
கர்ப்ப காலத்திற்கு ஒரு சிறப்பு உண்டு; இக்காலத்தில் எந்த உணவையும் எந்த வித குற்ற உணர்வில்லாமல் உண்ணலாம். இப்படிப்பட்ட சுதந்திரம் இருந்த போதிலும், சரியான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். இக்காலத்தில் நீங்கள் உன்ன வேண்டிய ஆரோக்கியமான உணவு பட்டியலைப் பற்றி இப்போது பார்க்கலாமா?
கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா?

கால்சியம்
எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் பெரிதும் உதவும் என்று நம் பள்ளி பாட புத்தகத்தில் படித்திருப்போம். முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் அவசியமாகும். சிசுவின் எலும்புக்கூட்டுக்குரிய வளர்ச்சிக்கு கால்சியத்தின் தேவைப்பாடு அத்தியாவசமாகிறது. அதனால் தினமும் அதிகமாக பாலை பருகுங்கள். அதே போல் சீஸ், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களையும் உட்கொள்ளுங்கள். உங்களுக்கு லாக்டோஸ் மீது சகிப்புத் தன்மை இல்லையென்றாலும் கூட, கால்சியம் அடங்கியுள்ள இந்த இயற்கை வளங்களுக்கு பதிலாக, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.

ஃபோலிக் அமிலம்
சிசுவின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் பெரிதும் முக்கியமானதாக உள்ளது. 'கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவுகளில் ஃபோலிக் அமிலம் அடங்கிய உணவுகளை போதிய அளவில் எடுத்துக் கொள்ளாததால் சிசுவின் நலம் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் ஃபோலிக் அமிலம் மாத்திரை வடிவில் பரிந்துரைக்கப்படுகிறது.' என்று கூறுகிறார் தீப்ஷிகா. மாத்திரைகளை தவற விடக்கூடாது என்றாலும் கூட, அதனுடன் சேர்த்து சோயா பன்னீர், கீரைகள் மற்றும் வெந்தயக்கீரை போன்ற கரும்பச்சை காய்கறிகள், சுரைக்காய், முலாம் பழம், கடலை வெண்ணெய் போன்றவற்றையும் உண்ணலாம். 'கர்ப்ப காலத்தில் கடலை என்றால் பல பெண்களுக்கும் அலர்ஜி ஏற்படும். அப்படி ஏதாவது அலர்ஜி ஏற்படும் அறிகுறி தெரிந்தால், உங்கள் உணவு பட்டியலில் இருந்து அதனை எடுத்து விடுங்கள். மேற்கூறிய மற்ற உணவுகள் உங்களுக்கு போதிய ஃபோலிக் அமிலத்தை கொடுக்கும்,' என்றும் தீப்ஷிகா கூறுகிறார். கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் ஏன் முக்கியத்துவத்தை பெறுகிறது என்பதை பற்றி படியுங்கள்.

இரும்புச்சத்து
உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து பெரிதும் உதவும். மேலும் சிசுவின் உடல் உறுப்புகள் மற்றும் அணுக்களின் வளர்ச்சிக்கும் அது பெரிதும் உதவும். 'சிசுவின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு கர்ப்பிணி பெண்களான உங்கள் பொறுப்பு அதிகம் என்பதை மறந்து விடாதீர்கள்.,' என்று தீப்ஷிகா கூறுகிறார். கீரைகள், வெந்தயக்கீரை, பச்சை பூக்கோசு போன்ற கரும்பச்சை காய்கறிகள், பேரிச்சம் பழங்கள், கிஸ்மிஸ், அத்திப்பழம், பீட்ரூட் மற்றும் ஆப்பிள் போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். 'இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்து உட்கொள்ளாதீர்கள். அதற்கு காரணம், இரும்புச்சத்து உறிஞ்சுவதை இடைப்பரப்பு செய்யும் கால்சியம்,' என்று தீப்ஷிகா எச்சரித்துள்ளார். உதாரணத்திற்கு பச்சை பூக்கோசு சாலட்டுடன் தயிர் அல்லது பாலுடன் சேர்த்த கீரை பொறியல்.

புரதம்
கர்ப்ப காலத்தில் புரதத்தின் அளவு 10 கி அளவு அதிகரிக்க வேண்டும். சிசு மற்றும் உங்கள் அணுக்கள் மற்றும் தசை வளர்ச்சிக்கு புரதம் பெரிதும் உதவுகிறது. முட்டை மற்றும் கோழி தான் சிறந்த புரதச்சத்துள்ள உணவுகளாகும். ஒரு வேளை நீங்கள் சைவ உணவை உண்ணுபவராக இருந்தால், அனைத்து பருப்பு வகைகள், சோயா மற்றும் முளைத்த பயறுகளை உட்கொள்ளலாம். அது உங்களுக்கு போதிய புரதத்தை அளிக்கும்.

வைட்டமின் பி12
இதனை கண்டிப்பாக தவறவிடாதீர்கள். தாய் மற்றும் சேயின் சரியான மூளை வளர்ச்சிக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. ஈரல் மற்றும் கோழி வகைகளில் போதிய வைட்டமின்கள் அடங்கியுள்ளது. முளைத்த பயறுகளிலும் கூட வளமையான அளவில் வைட்டமின் பி12 அடங்கியுள்ளது.

தண்ணீர்
கர்ப்ப காலத்தில் தண்ணீர் தேவை என்பதை பற்றி சொல்வதற்கு எந்த வித விளக்கமும் தேவையில்லை. இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்தும் அது பாதுகாக்கும்.

பழங்கள்
அனைத்து பழங்களையும் நன்றாக உண்ணுங்கள். கர்ப்ப காலத்தில், ஒரு நாளைக்கு ஐந்து வேளை பழங்களை உண்ண வேண்டும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ள பழங்களான முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை போன்றவற்றை உண்ணுங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அடங்கியுள்ளதால், அது இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும். ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்கும்.



Click it and Unblock the Notifications