Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாற்றங்கள்!!!
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் சருமத்திலும் பல மாறுதல்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான். மேலும் நிபுணர்களும், கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு நாள் நன்கு பொலிவாகவும், மறுநாள் பொலிவிழந்தும் காணப்படும் என்று சொல்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இத்தகைய மாறுதல்கள் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஒருசிலருக்கு இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம். மேலும் ஒருசிலவற்றை அனைத்து கர்ப்பிணிகளும் சந்திப்பார்கள்.
இப்போது அப்படி கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாறுதல்களைப் பார்ப்போமா!!!

முகப்பரு
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாறுதல்களில் ஒன்று தான் முகப்பரு. அதிலும் இக்காலத்தில் ஒரு முகப்பரு வந்தாலும், அவை வெடித்து முகத்தில் பரவ ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் போது ஸ்கரப்களை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும்.

சரும நிறம்
கர்ப்பத்தின் போது சருமத்தில் ஆங்காங்கு கருமையான புள்ளிகள் தோன்றும்.

கைகள்
கைகளைப் பார்த்தால், உள்ளங்கைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிலும் இரண்டாம் மாதத்தில் இந்த பிரச்சனை இருக்கும்.

எண்ணெய் பசை சருமம்
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய எண்ணெய் பசையைப் போக்க, இயற்கை வழிகளைக் கொண்டு சருமத்தை பராமரிப்பது நல்லது.

சரும வறட்சி
ஒருவேளை அதிகப்படியான எண்ணெய் பசை இல்லாவிட்டால், அதிகப்படியான வறட்சியை சந்திக்க நேரிடும். எனவே சரும வறட்சி அதிகமாக இருந்தால், அதிகமான அளவில் தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

அரிப்பு
ஒருசிலருக்கு அரிப்புக்கள் ஏற்படும். இதற்கு உணவுகள் காரணமாக இருக்கலாம். எனவே இத்தகைய அரிப்புக்களை சரிசெய்ய தானாக சிகிச்சையை மேற்கொள்ளாமல், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் சரும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தான் ஸ்ட்ரெட் மார்க். இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு காரணம் உடல் எடை அதிகரிப்பது தான். ஆனால் இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்கை ரோஸ்மேரி, ஆலிவ் மற்றும் பாதாம் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் மறைக்கலாம்.

பாதம்
கைகளைப் போன்றே, பாதங்களும் சிவப்பு நிறத்தில் மாறுவதோடு, அரிப்பையும் உண்டாக்கும். இதற்கு காரணம் ஹார்மோன் மாற்றங்களும், உடல் எடை அதிகரிப்பதும் தான். எனவே தினமும் மூலிகை எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சொரியாசிஸ்
கர்ப்பமாக இருக்கும் போது சொரியாசிஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். அதிலும் இது வந்தால், சருமம் சிவப்பு நிறத்தில் மாறி, புண்ணாகி, வெள்ளை செதில்கள் வெளியேறி, அரிப்புடன் இருக்கும்.

தோல் நிறமூட்டல்
தோல் நிறமூட்டல் என்பது சருமத்தில் ஆங்காங்கு ப்ரௌன் நிறத்தில் நிறமிகள் தங்கியிருப்பதாகும். இது கர்ப்பத்தின் போது ஏற்படக்கூடும். அதிலும் நெற்றி, தாடை மற்றும் கழுத்துகளில் தான் பெரும்பாலும் ஏற்படும்.



Click it and Unblock the Notifications
