புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணிகள் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

By Ashok CR

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஒன்றை நாம் மறந்து விட கூடாது; ஆனால் புகைப்பிடிக்கும் போது புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையால் பாதிக்கப்படுவதை போலவே பாஸிவ் ஸ்மோகிங்கிலும் நாம் பாதிப்புக்குள்ளாகிறோம். பாஸிவ் ஸ்மோகிங் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும் - நம் அருகில் இருப்பவர்கள் புகைப்பிடித்தால் அதையே பாஸிவ் ஸ்மோகிங் என்று கூறுகிறோம். பாஸிவ் ஸ்மோகிங்கால் பாதிப்படிய போவது கர்ப்பிணி பெண்களும் தான். கர்ப்பிணி பெண்கள் தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் நபர்களுடன் இருக்கும் போது, அது அவர்கள் வயிற்றில் தங்கியிருக்கும் சிசுவின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும். இப்படி பட்ட நபர்களுடன் ஒரு கர்ப்பிணி பெண் பல சூழ்நிலையில் இருக்க வேண்டிவருகிறது. அவர்களின் பெற்றோர், கணவர் மற்றும் உடன் வேலை செய்யும் நபர்கள் என இதற்கு சில உதாரணகளை சொல்லலாம்.

புகைப்பிடிக்கும் நபர்கள் கர்ப்பிணி பெண்களுடன் இருந்தாலே போதும், அது அவர்கள் வயிற்றில் உள்ள சிசுவை வெகுவாக பாதிக்கும் என்று மெடிக்கல் ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் செய்த ஒரு புதிய ஆய்வின் படி வெளியிட்டுள்ளது. சிசுவிற்கு ஏற்படும் சில மரபியல் மாற்றங்களுக்கும் புகையிலை-புகை படுவதற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. ஒரு கர்ப்பிணி பெண் புகைப்பிடிப்பதற்கு சமமான அளவில் பாஸிவ் ஸ்மோகிங்கிலும் இடர்பாடுகள் உள்ளது. அதனால் உங்கள் சிசுவிற்கு ஏற்பட போகும் பிறப்பு ஊனங்களை பற்றி உங்கள் கணவருக்கு தெளிவாக எடுத்துரையுங்கள். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்ணும் அவளுடைய கணவனும் புகைபிடிப்பவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது மிகவும் அவசியம் என்று ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலை சேர்ந்த டாக்டர் ஜானதன் விநிகாப் கூறுகிறார்.

How Passive Smoking Affects The Foetus

கர்ப்பிணி பெண்கள் எந்தளவுக்கு புகைப்பிடிக்கும் நபர்களுடன் இருக்கிறார்களோ அந்தளவு அவர்கள் வயிற்றில் உள்ள சிசு பிறக்கும் போது பாதிக்கப்படும். இப்படி தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் நபர்களுடன் ஒரு கர்ப்பிணி இருப்பதால் பிறக்க போகும் குழந்தைக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாமா?

ஊனம்

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்களின் அருகில் அடிக்கடி இருக்க நேரிட்டால் அது சிசுவிற்கு மரபியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். கை, கால்கள், விரைகளில் அல்லது மூளையில் ஊனம் போன்ற பல பிரச்சனைகளுக்கு பாஸிவ் ஸ்மோகிங்கால் சிசுக்கள் பாதிக்கப்படுகிறது.

உடனடி கருச்சிதைவு

தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருக்க நேரிடும் போது உடனடி கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். ஏற்கனவே சொன்னதை போல் பாஸிவ் ஸ்மோகிங்கால் சிசுவிற்கு மரபியல் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் அதன் வளர்ச்சி வெகுவாக பாதிப்படைந்து அது கருச்சிதைவில் கூட முடியலாம்.

பிறப்பு குறைபாடுகள்

கர்ப்ப காலத்தில் பாஸிவ் ஸ்மோகிங்கால் பாதிக்கப்படும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் முக்கியமான ஒன்று தான் பிறப்பு குறைபாடுகள். புகையிலையில் இருந்து வெளிப்படும் நச்சுத்தன்மையால் மரபியல் மாற்றங்களை தூண்டும். இவ்வகை மாற்றங்கள் அந்த குழந்தையின் ஆயுட்காலம் வரை நீடித்து பல குறைபாடுகளை அதற்கு ஏற்படுத்தும்.

கருவில் மடியும் சிசு

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் நூற்றில் 23 சதவீத பெண்களுக்கு அவர்கள் வயிற்றிலேயே சிசு மடிந்து விடுகிறது. தங்கள் தாயின் வாயிலாக நச்சுத்தன்மை கலந்த புகையை சிசு உள்வாங்கும் போது அதன் இயல்பு வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுகிறது. இது அவர்களின் மரணத்தில் போய் முடியவும் செய்யும்.

குறைவான எடையோடு பிறத்தல்

புகைப்பழக்கம் இல்லையென்றாலும் கூட, புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் குறைவான எடையோடு பிறக்க வாய்ப்புகள் அதிகம். பாஸிவ் ஸ்மோகிங் ஃபீடல் ஹைபோக்சியா மற்றும் வாசோகன்ஸ்ரிக்ஷன் போன்றவைகளை உண்டாக்கும். அதனால் தொப்புள் கொடி வழியாக சிசுவிற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும்.

உள் உறுப்புகளில் குறைபாடு

புகைப்பிடிப்பவர்களின் அருகில் ஒரு கர்ப்பிணி பெண் இருக்க நேரிட்டால் அவர்களின் தொப்புள் கொடியின் செயல்பாடு குறைந்து விடும். நிகோடின் என்ற நச்சு தொப்புள் கொடி வழியாக சென்று சிசுவிற்கு கிடைக்க வேண்டிய இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இது சிசுவின் இதயக்குழலிய அமைப்பு, இரையக குடலிய அமைப்பு மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பு போன்றவற்றை பாதித்து விடும்.

நரம்பியல் பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் பாஸிவ் ஸ்மோகிங்கால் ஒரு கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டால் அவர் வயிற்றில் உள்ள சிசுவிற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படும். சிகரெட் புகை கருப்பையகமான முறையில் சிசுவிற்கு சென்றதைந்தால் அவர்களின் நரம்பியல் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும்.

சுவாச கோளாறுகள்

பாஸிவ் ஸ்மோகிங்கால் ஒரு கர்ப்பிணி பெண் பாதிக்கப்படும் போது அவர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். பிறந்த பின் அவர்கள் மூச்சு விடுவதில் சிரமப்படுவார்கள். ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகளை எல்லாம் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும்.

குறைப்பிரசவம்

கர்ப்ப காலத்தில் பாஸிவ் ஸ்மோகிங்கால் பாதிப்படைந்திருந்தால் ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது குறைப்பிரசவம். அதனால் குழந்தையின் இயல்பு வளர்ச்சி பாதித்து வருங்காலத்தில் பல மருத்துவ சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.

Story first published: Friday, December 13, 2013, 22:01 [IST]
Desktop Bottom Promotion